Thursday, February 23, 2012

மூன்று கவிதைகள் - அருணோதயம்

ஒன்று

நிசப்தமான
இரவின்மீது விழும் கல்லடி
ஒன்று குழந்தையின்
இருமலாய் இருக்கிறது.
இல்லை மூட்டுவலியில்
முனகும்
முதியவனின் குரலாய் இருக்கிறது.

இரண்டு
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
விதிவிலக்காய் அண்டை வீட்டான்.

மூன்று
பக்குவமாய் உரமிட்டு
தாயன்போடு நீர்வார்த்து
பூச்செடிகளை வளர்க்கும் மகள்
அதன் பூக்களை
தானெழுதிய கவிதையாய்க் கொள்வாள்.
விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட
அக்கவிதையை
தன் கருங்கூங்தல் தொகுப்பின்
நடுப்பக்கம் வைத்தாள்.

(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மாவிபகவின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதைகள்)

No comments:

Post a Comment