Friday, February 21, 2020

கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டி


மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
http://maanudaviduthalai.blogspot.com/
மின்னஞ்சல்: maveepaka@gmail.com
செல்லடப்பேசி: 94431 84050


மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் (மாவிபக) வாழ்த்துகளும் வணக்கங்களும்
கு.பா.நினைவு சிறுகதைத் தொகுப்புகள், சுப்புராயுலு நினைவு கவிதைத் தொகுப்புகள் என இரண்டிற்குமான விருதுகள் -  2020 மார்ச் முதல் நாளில் அருப்புக்கோட்டை நீதிமனறம் அருகில் உள்ள இயற்கை அரங்கில் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்வின் பகுதிகளாக ஓர் இலக்கியக் கருத்தரங்கமும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியும் நடைபெற உள்ளன.
விருதுபெறும் எழுத்தாளர்கள் மட்டுமன்றி பல்வேறு எழுத்தாளர்களும் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் நடைபெற உள்ள கவிதைப் போட்டியில் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு தங்களின் படைப்புத் திறனை வெளிப்படுத்தலாம்.
கவிதைகள் கீழ்கண்ட தலைப்புகளில் இருக்க வேண்டும்.

ü  செதுக்கும் நிழலுருக்கள்
ü  விரலிடுக்கில் தப்பிய புகை
ü  தப்புகளும் தப்பித்தலும்
ü  தத்துவத்தின் வறுமை
ü  நிறம் மாறும் நிறங்கள்
ü  பிணம் தின்னும் சாஸ்திரங்கள்
ü  மின்னல் பொழுதே தூரம்
ü  மண்ணுக்குள்ளே சில மாந்தர்
ü  தத்தரிகட தத்தரிகிட தித்தோம்
ü  சிதைவுகளின் ஒழுங்கமைவு

Ø  கவிதைகள் எந்த வகையினதாகவும் (மரபுக் கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை) இருக்கலாம்.
Ø  கவிதைகள் மாணவர்களின் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும்.
Ø  கவிதையின் ஒரு பிரதியை மேடையேறும் நேரத்தில் நடுவர் குழுவிடம் கொடுத்துவிட்டு மேடையில் தங்கள் கவிதையை வாசிக்க வேண்டும்.
Ø  கவிதை வாசிப்பதற்கான நேரம் மூன்று மணித்துளிகள் (நிமிடங்கள்) மட்டுமே.
Ø  கவிதை வாசிக்கும் மாணவர்கள் கட்டாயமாக கல்லூரியின் அடையாள அட்டையுடன் வரவேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் கல்லூரி முதல்வர் அல்லது துறைத்தலைவரால் ஒப்பமிடப்பட்ட புகைப்படச் சான்றுடன் வரவேண்டும்.
Ø  கவிதைப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் 94431 84050 என்ற செல்லிடப்பேசி எண்ணில் குறுந்தகவல், வாட்ஸ்அப் அல்லது குரல்வழித் தொடர்பில் பதிவு செய்து கொள்வது நல்லது. இயலாதவர்கள் நிகழ்வு நாளில் காலை 9.30 மணிக்கு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள். (ஒருங்கிணைக்க ஏதுவாக இருக்கும்)
Ø  போட்டி தொடர்பாக ஐயங்கள் தீர்க்கவோ மேலதிக விபரம் பெற்றுக் கொள்ளவோ தொடர்பு கொள்வதில் எந்தத் தயக்கமும் தேவையில்லை.
Ø  மூன்று பரிசுகள் அளிக்கப்படும்.
Ø  பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஊக்கப் பரிசும் சான்றிதழும் உண்டு.
Ø  நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

வாழ்த்துகளுடன் மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்

Thursday, February 13, 2020

மாவிபக விருதுகள் 2019 வழங்கும் விழா

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
மாவிபக விருதுகள் 2019 வழங்கும் விழா
இலக்கியக் கருத்தரங்கம்
கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டி
2020 மார்ச் 1 (ஞாயிறு)
காலை சரியாக 10.00 மணிக்கு
அருப்புக்கோட்டை
நீதி மன்றம் அருகில்
இயற்கை அரங்கில் 

காலை 10.00 மணி
கலை வழித் தொடக்கம்
வரவேற்பதற்காக: தோழர் மாணிக்
 காலை 10.15 மணி
மாணவர்களுக்கான கவிதைப் போட்டி:
ஒருங்கிணைப்பு: மருத்துவர் பரிமளச்செல்வன்
காலை 11.00 மணி
இலக்கியக் கருத்தரங்கம்
தலைமை: தோழர் மதிகண்ணன்
 ‘உயிர் எழுத்து பத்திரிகைக்கான சிறுகதைத் தேர்வில் எனது அனுபவங்கள்
திருமிகு சுதீர் செந்தில், ஆசிரியர், உயிரெழுத்து
‘நவீன கவிதைகளின் சமகால பாடுபொருள்கள்
கவிஞர் யவனிகா ஸ்ரீராம்
பிற்பகல் 1.00 முதல் 2.00 வரை – இடைவேளை
பிற்பகல் 2.00 மணி
மாவிபக விருதுகள் 2019 வழங்கும் விழாவும்
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதலும்
தலைமை: தோழர் பாட்டாளி, எழுத்தாளர்
நடுவர் குழுவின் சார்பாக விருதுகள் தேர்வு குறித்த பதிவுரை
சிறுகதைத் தொகுப்புகள்: தோழர் சத்யா
கவிதைத் தொகுப்புகள்: தோழர் கேகே
கு.பா. நினைவு சிறுகதைத் தொகுப்புகளுக்கான விருதுகள்
பிராண நிறக் கனவுஅண்டனூர் சுரா
ரசூலின் மனைவியாகிய நான் – புதிய மாதவி
கள்ளிமடையான் – க.மூர்த்தி
அவஸ்தை – மதிவாணன்
சுப்புராயுலு நினைவு கவிதைத் தொகுப்புகளுக்கான விருதுகள்
அபோர்ஷனில் நழுவிய காரிகை – ஷக்தி
ரொட்டிகளை விளைவிப்பவன் – ஸ்டாலின் சரவணன்
பிடிமண் – முத்துராசா குமார்
மரப்பாச்சியின் கனவுகள் - யாழினிஸ்ரீ
விருதுபெற்ற நூலாசிரியர்கள் ஏற்புரை
நன்றி கூறுவதற்காக: தோழர் விஜயகுமார்
அமர்வுகளின் இடையில் / தொடக்கத்தில் / இறுதியில் என…
பாடல்கள் பாடுவதற்காக: தோழர் முனியசாமி, திருமதி ப்ரியதர்ஷினி, திருமிகு அருப்புக்கோட்டை செல்வம், கவிஞர் தனசேகரன், தோழர் திரு
பரதநாட்டியம் ஆடுவதற்காக: செல்வி மு. ஸ்ரீகிருஷ்ண ப்ரியா, நிகிதா, ரித்திகா
நாடகம் நிகழ்த்துவதற்காக: கூடல் கலைக் குழு
 Media Partner: Chaplin Studios

விடைபெற்ற தோழமை - விஜி - அஞ்சலி - கவிதை



மரணிக்கவில்லை
சுப்புராயுலு தோழரின்
வாழ்க்கையும் வரிகளும்..

சொற்செட்டுகளில்
அடைபடா ஆளுமை
குன்றா வாசிப்பு
தளரா சிந்தனை

வரலாறாய் விரியும் வார்த்தைகள்...
வாழ்வின் சிடுக்குகளில் களையா கவிமனம்...
உடனிருந்த பொழுதெல்லாம் ததும்பும் உரையாடல்
வெளிப்படுத்தாத சொற்களின் அழுத்தத்தில்
கனத்து கிடக்கிறது மனது...

கொப்பளித்து வரும் உணர்வுகளை
கொட்டித் தீர்க்க வழியற்று சுழன்று திரிகின்றன நினைவுகள்...
என்ன சொல்லி மனமாற...
என்ன சொல்லி நடைபோட...

நீளும் பயணத்தில்
நீங்கா நினைவுகளுடன்
நமது திசைவழியில்
தொடர்கிறது வாழ்வின் பயணம்
தோழரின் இழப்போடும்
தோழமையின் பிடிப்போடும்....
(பிப்ரவரி 13 - 2020 - தோழர் சுப்புராயுலுவின் முதலாண்டு நினைவுநாள்)

Saturday, February 8, 2020

தராசை முதலில் எடைபோடு,,, - நூல் வெளியீடு

          வேறுவேறு இடங்களில், வேறுவேறு நாட்களில், வேறுவேறு சூழல்களில், வேறுவேறு அமைப்புகளின் அமர்வுகளில் / மேடைகளில், வேறுவேறு பார்வையாளர்கள் மத்தியில், வேறுவேறு நூல்கள் குறித்து தன்னுடைய சார்புநிலையில் பிறழாமல் தோழர் மதிகண்ணன் பேசிய உரைகளின் (ஒரு அணிந்துரை தவிர) தொகுப்பு இந்நூல்.

          ‘அ-நிக்ரகம்’ ‘ஆர்டருக்காகக் காத்திருப்பவர்கள்’ என இரு சிறுகதைத் தொகுப்புகளைத் தந்த மதிகண்ணனின் இந்த நூலும்கூட பல்வேறு அரங்கங்களின் உரைகளுக்கான நடைகளுக்காக / உரைநடைக்காகப் பேசப்படும்.

என்றென்றும் தோழமையுடன்
கதவு பதிப்பகமும் பொன்னுலகம் புத்தக நிலையமும்


பகுதியிலிருந்து முழுமையை நோக்கி...
நிகழ்வின் ஒரு பகுதியாக
மதிகண்ணனின் ‘தராசை முதலில் எடைபோடு...’ நூல் வெளியீடு
2020 பிப்ரவரி காலை 10 மணிக்கு
பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகத்தின் எதிரில் உள்ள
இயற்கை அரங்கில்...

Wednesday, February 5, 2020

பகுதியிலிருந்து முழுமையை நோக்கி...

          பொதுத்துறை BSNLல் இருந்து விருப்ப ஓய்வில் வெளியேறி பொதுக்களத்திற்கு வரும் தோழர் மதிகண்ணனை வாழ்த்தி வரவேற்போம்...