Sunday, March 24, 2019

கதையரங்கம் 009

மாவிபகவின் கதையரங்கம் 1
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
அருப்புக்கோட்டையில்
2019 மார்ச் 10ஆம் நடத்திய கதையரங்கம்.
ஒருங்கிணைப்பு
- தோழர்
கருப்பு & ரமேஷ்
கதைபந்தயம்
கதை எழுதியவர்ஆண்டன் செகாவ்
கதை சொல்பவர்மதிகண்ணன்

Saturday, March 23, 2019

கதையரங்கம் 008

மாவிபகவின் கதையரங்கம் 1
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
அருப்புக்கோட்டையில்
2019 மார்ச் 10ஆம் நடத்திய கதையரங்கம்.
ஒருங்கிணைப்பு
- தோழர்
கருப்பு & ரமேஷ்
கதைஒரு சிற்றெரும்பின் மறைவு
கதை எழுதியவர்கி.ராஜநாராயணன்
கதை சொல்பவர்கேகே

கதையரங்கம் 007

மாவிபகவின் கதையரங்கம் 1
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
அருப்புக்கோட்டையில்
2019 மார்ச் 10ஆம் நடத்திய கதையரங்கம்.
ஒருங்கிணைப்பு - தோழர் கருப்பு & ரமேஷ்
கதைஆக்கவோ? நீக்கவோ?
கதை எழுதியவர்மதிகண்ணன்
கதை சொல்பவர்அஷ்ரஃப்

வீடியோவிற்கு படத்தில் சுட்டவும்

Thursday, March 21, 2019

கதையரங்கம் 006

மாவிபகவின் கதையரங்கம் 1
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
அருப்புக்கோட்டையில்
2019 மார்ச் 10ஆம் நடத்திய கதையரங்கம்.
ஒருங்கிணைப்பு
- தோழர்
கருப்பு
கதைசித்திரை
கதை எழுதியவர்சத்யா
கதை சொல்பவர்ரமேஷ்

கதையரங்கம் 005

மாவிபகவின் கதையரங்கம் 1
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
அருப்புக்கோட்டையில்
2019 மார்ச் 10ஆம் நடத்திய கதையரங்கம்.
ஒருங்கிணைப்பு - தோழர் ரமேஷ்
கதைஉலகப் புகழ் பெற்ற மூக்கு
கதை எழுதியவர்வைக்கம் முகம்மது பஷீர்
கதை சொல்பவர்கருப்பு

Wednesday, March 20, 2019

கதையரங்கம் 004

மாவிபகவின் கதையரங்கம் 1
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
அருப்புக்கோட்டையில் 2019 மார்ச் 10ஆம் நடத்திய கதையரங்கம்.
ஒருங்கிணைப்பு தோழர் ரமேஷ்தோழர் கருப்பசாமி
கதைபழி வாங்கும் பொம்மை (படக்கதை)
வெளியீடுமுத்து காமிக்ஸ்
கதை சொல்பவர் - மாணிக்

கதையரங்கம் 003

மாவிபகவின் கதையரங்கம் 1
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
அருப்புக்கோட்டையில்
2019 மார்ச்
10ஆம் நடத்திய கதையரங்கம்.
ஒருங்கிணைப்பு
தோழர் ரமேஷ் & தோழர் கருப்பசாமி
கதை
The Boy in the Striped Pyjamas
கதை எழுதியவர் – John Boyne
கதை சொல்பவர் - சத்யா

Tuesday, March 19, 2019

கதையரங்கம் 002

மாவிபக’வின் கதையரங்கம் 1
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
அருப்புக்கோட்டையில்
2019 மார்ச் 10ஆம் நடத்திய கதையரங்கம்.
ஒருங்கிணைப்பு
தோழர் ரமேஷ் & தோழர் கருப்பசாமி
கதை – காலப்பயணிகள்
கதை எழுதியவர் – விழியன்
கதை சொல்பவர் - இலக்கியா
https://www.youtube.com/watch?v=C4GKhqPqveY
இங்கும் சுட்டலாம்

Monday, March 18, 2019

கதையரங்கம் 001

மாவிபக’வின் கதையரங்கம் 1 மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் அருப்புக்கோட்டையில் 2019 மார்ச் 10ஆம் நடத்திய கதையரங்கம். ஒருங்கிணைப்பு தோழர் ரமேஷ் & தோழர் கருப்பசாமி கதை – மங்களநாதர் கதை எழுதியவர் – கந்தர்வன் கதை சொல்பவர் - கா.சி.தமிழ்க்குமரன்

Tuesday, March 12, 2019

மாவிபக’ நடத்தும் நினைவேந்தலும் நூல் வெளியீடும்

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் சார்பில்
தோழர் சுப்புராயுலு நினைவேந்தல் அரங்கம்

அருப்புக்கோட்டை
பழைய பேருந்து நிலையம் அருகில்
அருஞ்சுனை பிரஸ்
2019 மார்ச் 17 ஞாயிறு
மாலை சரியாக 6 மணிக்கு

தலைமையேற்று ஒருங்கிணைக்க
தோழர் கேகே

நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள
திருமிகு குருசாமி
தோழர் விஜயகுமார்
தோழர் சுரேஷ்
தோழர் முனியசாமி

தூரங்களைத் தொட்டுத் திரும்ப வேண்டும்
நூலை வெளியிட்டு உரையாற்ற
தோழர் மதிகண்ணன்

நூல் பிரதிகள் பெற்றுக்கொள்ள
தோழர் சுப்புராயுலுவின் மகன்கள்
திருமிகு தயானந்தன்
திருமிகு யுவராஜ்

நூலைப் பெற்றுக்கொண்டு மதிப்புரையாற்ற
தோழர் பரிமளச் செல்வன்

Friday, March 8, 2019

கதையரங்கம் 1

மாவிபக’வின் கதையரங்கம் 1
Ø John boyne – வின் ‘The boy in the Striped Pyjamas’ தோழர் சத்யா
Ø காமிக்சில் இருந்து ‘பழி வாங்கும் பொம்மை’ தோழர் மாணிக்
Ø கி.ராவின் ‘ஒரு சித்தெறும்பின் மறைவு’ தோழர் கேகே
Ø பள்ளிக் காலத்தில் படித்த கதை தோழர் அருப்புக்கோட்டை காயத்ரி
Ø ஒரு சிறுகதை தோழர் தமிழ்க்குமரன்
Ø ஆண்டன் செகாவின் ‘பந்தயம்’ தோழர் மதிகண்ணன்
Ø மதிகண்ணனின் ‘ஆக்கவோ? நீக்கவோ?’ தோழர் அஷ்ரஃப்தீன்
ஒருங்கிணைக்க தோழர் கருப்பசாமி / தோழர் ரமேஷ்

Wednesday, March 6, 2019

நூறு ரூபாயும், அப்பாவின் புகைப்படமும் - சிறுகதை - சத்யா


நூறு ரூபாயும், அப்பாவின் புகைப்படமும்
- சத்யா
வேகவேகமாக ஸ்கூல் பையை எடுத்து மாட்டிக்கொண்டேன். ஓட்டமும் நடையுமாக செம்பருத்திச் செடிகளைக் கடந்து, காபிச் செடிகளுக்கு நடுவில் இருந்த பாதையில் நடந்தேன். தோட்டத்துக்கு நடுவில் ஒரு சீதாமரம் இருந்தது. அதிலிருந்த காய்களைப் பார்த்து ‘இந்த சனிக்கிழமை பறிக்கலாம்’ என்று நினைத்துக்கொண்டேன். வலதுபுறம் இருந்த சிமெண்ட் தரையால் ஆன காபிக்கொட்டைகளை காயவைக்கும் கலத்தினைக் கடந்து அகலமான சாலையை அடைந்தேன். இடதுபுறம் அப்பாவின் ஆபீஸ் வலதுபுறம் பஸ்ஸ்டாப் செல்லும் பாதை. பென்சில் வாங்க வேண்டும் என்பது நினைவுக்கு வந்தது. சட்டென்று திரும்பி அப்பாவின் ஆபீசுக்கு சென்றேன். வழியில் ஒரு பாம்பு உடலை நெளித்து நெளித்து வந்தது. வேகமாக திரும்பி ஒரு குச்சியை எடுத்து அடிக்கப் போனேன். “சூ... போ...” என்ற அப்பாவின் குரல் கேட்டது. பாம்பை விட்டு நிமிர்ந்து பார்த்தேன். சிரித்தபடி அப்பா நின்றிருந்தார். “பூச்சி புட்டெல்லாம் கொல்லக்கூடாதுப்பா. பாவம்” என்றார். அந்த பாம்பை திரும்பிப்பார்த்தேன். அது அப்பாவின் பேச்சைக்கேட்டதுபோல் திரும்பி காட்டுக்குள் போய்க்கொண்டிருந்தது.
“அப்பா. பென்சில் வாங்கணும்” என்றேன்.
“என்னப்பா போன வாரம்தானே புதுசு வாங்கி குடுத்தேன் அது என்ன ஆச்சு” என்றார்.
சிணுங்கியபடி “அது தீந்து போச்சு” என்றேன். உண்மையில் தொலைத்திருந்தேன்.
“சரி இந்தா” என்று பாக்கெட்டில் கையை விட்டு ஐந்து ரூபாய் எடுத்துக்கொடுத்தார். நான் அதை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு டாட்டா சொல்லியபடி ஓடினேன். இரும்பு கேட் வரும்வரை அப்பா பார்த்துக்கொண்டேயிருந்தார்.
இரண்டரை அடி உயர இரும்பு கேட்டைத் தாண்டும்போது ட்ரவுசர் மறைந்து பேண்டாக மாறியிருந்தது. குதித்த வேகத்தில் பாக்கெட்டில் இருந்து தவறி விழுந்த பேனாவை எடுத்து பாக்கெட்டில் சொருகிக்கொண்டேன். உயரமான சிமெண்டாலான ரோட்டில் நடந்து தார் ரோட்டிற்கு வந்து சேர்ந்தேன். நடந்துபோனபோது பின்னால் மாட்டியிருந்த பள்ளி பை காணாமல் போய் கையில் ஒற்றைப் புத்தகம் இருந்தது. ‘வந்தியத்தேவன் வாள்’ என்று பெயரிடப்பட்ட அந்த புத்தகத்தை திருப்பிக்கொடுத்துவிட்டு வேறு புத்தகத்தை லைப்ரரியிலிருந்து எடுத்து வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். நேராக பஸ்ஸ்டாப்பிலிருந்த குமார் டீக்கடைக்குப் போனேன். பாக்கெட்டிலிருந்த ஐம்பது ரூபாயை நீட்டி 'அண்ணா ஒரு பாக்கெட் கிங்ஸ்'என்றேன். பின்னால் திரும்பி டீ கிளாசுகளைக் கழுவிக்கொண்டிருந்தவர் திரும்ப அதிர்ச்சியானேன். அப்பா. புன்னகையுடன் அப்பா என்னிடமிருந்து ஐம்பது ரூபாயை வாங்கிக்கொண்டு ஒரு பாக்கெட் கிங்ஸும் இருபது ரூபாய் நோட்டையும் கொடுத்தார். வெளியே வந்து பற்றவைக்க தீப்பெட்டி தேடினேன் கிடைக்கவில்லை முன்னால் ஒருவர் புகைத்துக்கொண்டிருக்க அவரிடம் சென்று நெருப்பு கேட்க அவரை அழைத்தேன். திரும்பினால் அப்பா...
சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். உடலெல்லாம் வேர்த்துக்கொண்டிருந்தது. ஒரு பக்கம் காயத்ரியும் குழந்தை பாரதியும் படுத்துக்கொண்டிருக்க போன் அடித்துக்கொண்டிருந்தது. எடுத்துப்பார்த்தேன். மதிகண்ணன் என்றது. எடுத்து “சொல்லுங்க தோழர்” என்றேன்.
“சத்யா. தோழர் சுப்புராயலு இறந்துட்டாரு” என்றார்.
“அய்யய்யோ”
“இப்பதான் அவங்க பையன் கூப்பிட்டு சொன்னாரு” என்றார்.
“சரி நான் வரேன்” என்று போனை வைத்தேன்.
நேற்றுதான் கதை சொல்லல் நிகழ்ச்சிக்கு அவர் பெயரை கேகே பரிந்துரைத்திருந்தார். அவரை முதன்முதலில் பார்த்தது நினைவுக்கு வந்தது. மாணிக் வீட்டில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ள நான் வந்திருந்தபோது பரஸ்பர அறிமுகத்தில் லெனின் சல்யுட்டுடன் 'வணக்கம் தோழர்'என்றார். வெள்ளை வேட்டி சட்டையில் கையில் எதோ புத்தகத்துடன் அமர்ந்து வயதானவர்களுக்கே உரிய வகையில் கழுத்தை கொஞ்சம் தூக்கி அந்தப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார். அதன் பிறகு நடந்த எல்லா கூட்டங்களிலும் அவரின் அதே லெனின் சல்யூட்டையும் புத்தக வாசிப்பையும் காண முடியும். ஆழ்ந்த படிப்பாளி. ரசிகர். படித்ததை மற்றவர்களுடன் பகிரும்போது மேற்கோள்களுடன் சொல்லுவார். அவருடைய வயதுக்கும் வாசிப்பு வேகத்துக்கும் சம்பந்தமே இருக்காது.
“ஏங்க...” என்று காயத்ரி உலுப்பினாள். “என்னங்க ஆச்சு? யாரு போன்ல? எதுக்கு இப்படி உக்காந்துருக்கீங்க?” என்று கேள்விகளை அடுக்கினாள்.
“சுப்புராயலு தோழர் இறந்துட்டாராம்மா” என்றேன்.
“என்னங்க சொல்றீங்க? நேத்து கூட பேசிட்டு இருந்தோமே? உடம்பு ஏதும் முடியாம இருந்தாரா?” என்றாள். நான் கையை விரித்தேன்.
உடம்பு எப்போது சரியில்லாமல் போகிறது? வயோதிகத்தாலா? நோய்மையாலா? அல்லது இரண்டாலுமா? அப்போது பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு வாரம் முன்னால் நான் ஊருக்கு சென்று திரும்ப தாமதமானதும் இரவு மூன்று மணி வரை வீட்டு திண்ணையிலேயே அமர்ந்துகொண்டு நான் வருவதற்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்த அப்பா இரண்டே நாள் காய்ச்சலில் இறந்து போயிருந்தார். எப்போதும் நாம் எதிர்பாராதபோது வந்து நம் முகத்தில் அறைந்துவிட்டுப் போவதுதானே இறப்பு. தந்தையின் இறப்பு செய்தியை தெரிவிக்கும் மகனின் மனநிலை எப்படி இருக்கும்? அதுவும் நேற்று வரை நன்றாக பேசிக்கொண்டிருந்த தந்தை இன்று இல்லை என்பதை எப்படி சொல்வது? என் அப்பாவுக்கு கால் வலி, சுகர் போன்ற வியாதிகள் இருந்தாலும் என்றும் ஓய்ந்து படுத்ததில்லை. என்றுமே காலை ஐந்து மணிக்கு எழுந்து தனது வேலைகளை முடிப்பவர். இரவிலும் நேரம் தாண்டி விழித்திருந்ததில்லை. அவருக்கு எல்லாமே நேரம்தான். ஆறு மணி பேருந்தைப் பிடிக்கவேண்டுமென்றால் ஐந்தரைக்கே சென்று காத்திருப்பார். தாமதம் என்ற வார்த்தை அவரது அகராதியில் இல்லை.
எல்லா கூட்டங்களுக்கும் முதல் ஆளாக வந்து நிற்பவர் சுப்புராயலுவாகத்தான் இருக்கும். நீங்கள் எவ்வளவு முன்னால் வந்தாலும் உங்களுக்கு ஐந்து நிமிடமேனும் முன்னால் வந்திருப்பார் அவர். அதுவும் ஒரு ஹெர்குலஸ் சைக்கிளில். கடைசி வரை அவர் சைக்கிளில்தான் வந்துகொண்டிருந்தார். இனி அந்த சைக்கிள் கொஞ்ச கொஞ்சமாக துருப்பிடித்துப் போய்விடுமோ? அவர் படித்து வைத்திருந்த புத்தகங்கள் கரையான் ஏறுமோ? ஒரு மனிதனின் இழப்பு அவர் சார்ந்த பொருட்களைக்கூட அரித்துத் தின்றுவிடுகிறதே. மனிதர்களை அது என்ன செய்யும்? ‘முதலாவதாக வரும் அவர் இல்லை என்றால் கூட்டம் எப்படித் துவங்கும்?’ என்று முட்டாள்தனமாக நினைத்துகொண்டேன்.
வீட்டில் வாசலில் சிவப்பு நிற பந்தல் போடப்பட்டிருந்தது. நான், காயத்ரி, மதிகண்ணன், அஸ்ரப், பாண்டியன் ஐவரும் ஏற்கனவே வந்திருந்த கவிதா தம்பதியினருடன் போனோம். உள்ளே முதலில் இருந்த சிறிய வரவேற்பறையில் புத்தகங்கள் அடுக்கப்பட்ட ஒரு டேபிள் இருந்தது. வயது, ஜாதி, மதம், சொந்தம் என்று எந்த சம்பந்தமும் இல்லாத எங்கள் அனைவரையும் அந்தப் புத்தகங்கள்தானே இணைத்தன? அவற்றின் ஊடாகத்தானே எங்களை சந்தித்து, இணைந்து ஒன்றாகப் பயணப்பட்டார் சுப்புராயலு.அடுத்த ஹாலில் நிறைய பெண்கள் அமர்ந்திருக்க சுப்புராயலு சேரில் உட்காரவைக்கப்பட்டிருந்தார். கழுத்திலும் உடலிலும் பல மாலைகள் போடப்பட்டிருந்தன. கையில் எதோ புத்தகம் வைத்திருந்தார். உள்ளே நுழைந்ததும் அவர் அணிந்திருந்த கண்ணாடியில் ஒளி பிரதிபலித்து கண்ணை சிமிட்டுவதுபோன்ற உணர்வைத் தந்தது. ஒரு நொடி கண்ணை தூக்கிப் பார்ப்பதுபோல் இருந்தது. சேரிலிருந்து பாதி எழுந்து கையைத் தூக்கி லெனின் சல்யூட் வைத்து “வாங்க தோழர். வணக்கம்” என்று சொல்வது போலவே இருந்தது. என் உடல் பலம் இழந்து தளர்ந்தது போல் உணர்ந்தேன். அதற்கு மேல் அவரைப் பார்க்க சக்தியில்லை. பின்னால் நின்று அவர் கண்ணில் படாமல் மறைந்துகொண்டேன்.
இதேபோல்தான் அப்பாவை ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்ல தயாரானபோது சட்டென்று இரண்டுமுறை கையை வெட்டி என்னைப் பார்த்த பார்வையோடு அப்பா இறந்துபோனார். கண்களை மூடவேயில்லை. அந்தப் பார்வை என்னிலிருந்து அகலவேயில்லை. அப்பா இருந்தபோது பந்தல் போடப்பட்டதா? சேர் போடப்பட்டதா? யார் இதையெல்லாம் செய்தார்கள் எதுவும் நினைவில் இல்லை. இயந்திரத்தனமாக என்னிடம் சொல்லப்பட்டவற்றை செய்துகொண்டிருந்தேன். அழக்கூட முடியாமல் அதிர்ந்துபோயிருந்தேன். அழவும் தெரியாது. வேலை, காதல், திருமணம், குழந்தை இதற்கெல்லாம் ஒரு வயதும் பக்குவமும் தேவைப்படுவதைப்போல கண்ணீருக்கும் ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. அந்த பக்குவம் அன்று எனக்கு இல்லை என்றே நினைக்கிறேன். அப்பாவின் மீது கொண்ட அன்பால் அவர் வேலை செய்த காபி எஸ்டேட்டிலிருந்து ஒரு ஊரே கிளம்பி வந்து அவரைச் சுற்றி அழுதுகொண்டிருந்தது. நான் மட்டும் ஒரு பக்கமாய் இது எதிலும் கலந்துகொள்ளாமல் இயந்திரமாய் சொன்னதை செய்துகொண்டிருந்தேன்.
“மமோபாஸ்த சமஸ்த துரிதக்ஷயத்வார ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்தியர்த்தம்...” என்று அர்த்தம் புரியாத மந்திரங்களை மாமா சொல்லச்சொல்ல ஈர உடலோடு வீட்டின் வாசலில் அமர்ந்து சொல்லிக்கொண்டிருந்தேன். அப்பாவின் உடல் நீர் ஊற்றி அலம்பப்பட்டு கோடித்துணி போர்த்தப்பட்டது. வறட்டிகளை உடைத்து ஒரு சிறிய சட்டியில் போட்டு அதில் கற்பூரம் வைத்து எரித்து புகைச்சலோடு என்னிடம் கொடுக்கப்பட்டது. அதை கட்டியிருந்த கயிற்றைப் பிடித்து நான் முன்னால் போய்க்கொண்டிருக்க அப்பாவின் உடலை வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தார்கள். நான் வெறுங்காலில் நடந்து நான்கைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள சுடுகாட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தேன். அப்பா இருந்திருந்தால் “கண்ணா, நடந்து போகாதடா” என்று சொல்லி தன் அருகில் அமர்த்திக்கொண்டிருப்பார்.
“இந்த சடங்குகளெல்லாம் பத்தாம்பசலித்தனம் தோழர்” என்பார் சுப்புராயலு. “இவர்கள் நம் சமூகம் முன்னேற என்ன செய்தார்கள்?” என்று தன வயதொத்தவர்களை குறைகூறுவார். “தான், குடும்பம், பிள்ளைன்னு வாழுவதெல்லாம் வாழ்க்கையே இல்லை” என்று சலித்துக்கொள்வார். பல சமயம் தன்னைக்குறித்தும் சலித்துக்கொள்வதுண்டு, ஆனால் எழுபத்தைந்து வயது மனிதரால் சமூகத்தைப் புரட்டிபோடுமளவு என்ன செய்துவிட முடியும்? தடுமாறாமல் சைக்கிள் ஓட்டலாம். “உலகம் ஒரு நாடக மேடைன்னு ஷேக்ஸ்பியர் சொல்றாரு தோழர், இவங்கள்லாம் அந்த நாடக மேடையில இருக்குற பெஞ்சு சேர் மாதிரி.” என்று சொல்லுவார். நிறைய பேர் பெஞ்சுகளைத் தேய்த்தபடி அமர்ந்திருந்தனர்.
ஒவ்வொரு மனிதன் இறக்கும்போது அவனுடன் ஒரு வாழ்வியல் இறந்துபோகிறது. நடை, உடை பாவனைகளோடு சிந்தனை முறை, கண்ணீர், கோபம், அன்பு, கூருணர்வு என அனைத்தும் அந்த மனிதனுடன் இறந்துபோகிறது. அவனோடு எரிக்கவோ புதைக்கவோ படுகிறது. அவனது கைரேகையைப்போல. என் அப்பாவுக்கென்று ஒரு சில அடையாளங்கள் இருந்தன. குடை, கொஞ்சம் சாய்ந்த நடை, பளீரென்ற சிரிப்பு, என்று அனைத்தும் அவருடன் எரிக்கப்பட்டன. அப்பா இல்லாத முதல் இரவு மிகவும் கடினப்பட்டே கழிந்தது. ஒரு மனிதன் இல்லாத வெற்றிடத்தை எதைக்கொண்டு நிரப்புவது? அவரது பாசத்தை, கண்டிப்பை, சிரிப்பை, கண்ணீரை நிரப்பும் பருப்பொருள் ஏது?
பாண்டியன் கிளம்பிப் போனபின்பு கொஞ்ச நேரத்தில் கேகே வந்தார். வந்து அமர்ந்தவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. “நேற்றுதான் தோழர் பேசினேன். ஹாஸ்பிட்டல் சுவற்றில் நிறைய படம் வரைஞ்சிருக்காங்க. எல்லாம் வின்சென்ட் வான் கோ ஓவியங்கள் மாதிரியே இருக்குன்னு சொன்னாரு, ‘ஆஹா நல்ல ரசனையான டாக்டரா இருக்காரேன்னு நான்கூட சொன்னேன்’, அப்பறமா சாப்பிட்ட மருந்துக்கு ஒரே ஹாலுசினேஷனா இருக்குன்னு சொன்னாரு” அவரால் முடிக்க முடியவில்லை. கண்களைத் துடைத்துக்கொண்டு, “நாளைக்கு பாக்க வரேன்னு சொன்னேன், உயிர் எழுத்துல தலையங்கம் நல்லா இருக்கு வரும்போது கொண்டுவாங்கன்னு சொன்னார்” அவரிடம் எப்படி உயிர் எழுத்தைக் கொடுப்பது என்ற நடுக்கம் கேகேயின் கைகளில் தெரிந்தது. ஒரு மனிதனிடம் கடைசியாக பேசுவது என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏசுநாதரின் கட்டளைகளை உலகிற்கு கொண்டு சென்ற சீடர்களின் லாஸ்ட் சப்பர் போன்றதல்லவா அது?
ஆம், சுப்புராயலு இந்த உலகிற்கு செய்தி சொல்லியிருக்கிறார். கடைசி நாளிலும் மாபெரும் ரசிகனாய் இருந்துகொண்டேயிருந்திருகிறார். கடைசி வரைக்கும் வாசித்துக்கொண்டே இருந்திருக்கிறார். அவருக்குப் பிடித்த பகத்சிங்கைப்போலவே கடைசி நாள் வரை படித்துகொண்டேயிருந்திருக்கிறார். “கொஞ்சம் நேரம் கொடுங்கள், இரண்டு புரட்சியாளர்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்று சொன்ன பகத்சிங்கைப்போல அவரும் ஒருவேளை ‘கொஞ்சம் நேரம் கொடுங்கள், இரண்டு கலைஞர்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்’ என்று சொல்லியிருக்கலாம். யார் கண்டது.
அவரைப்போன்ற ரசிகன் ஒவ்வொரு கலைஞனுக்கும் வரம். ஒவ்வொரு கலைஞருக்குள்ளும் இருக்க வேண்டிய முக்கியமான தகுதி அவரது ரசனை. படிப்பதில் சிறந்ததைக் கொண்டாடும் மனம் அவருக்கு வாய்த்திருந்தது. அந்த கொண்டாட்டம்தான் அவரது ஜீவ நாடி. சிலாகிப்பிலக்கியத்தின் தொல்காப்பியர் அவர். இயற்கை, கலை, குழந்தைகள், வாழ்வு என அனைத்தையும் சிலாகிக்கத் தெரிந்திருந்தது அவருக்கு.
புத்தக விமர்சனமாக இருக்கட்டும், எழுதுவதாக இருக்கட்டும், வாசிப்பாக இருக்கட்டும், ரசிப்பதிலாக இருக்கட்டும் ‘தோழர், உடம்பை பார்த்துக்கோங்க. அலையாதீங்க’ என்று மதிகண்ணனிடம் சொல்வதாக இருக்கட்டும், குழந்தைகளைப் பற்றி எங்களிடம் விசாரிப்பதாக இருக்கட்டும். அதில் ஒரு நூறு சதவீத ஈடுபாடு இருக்கும். ஐம்பது வருட வயது இடைவெளியை தன் விடாத வாசிப்பால் இட்டு நிரப்பியவர் அவர். இவையெல்லாம்தான் அவர் இவ்வுலகிற்கு விட்டுசென்ற செய்தியாக இருக்கலாம்.
இரண்டு மாதம் முன்பு கூட்டம் நடந்தபோது, கொஞ்சம் உடல் நலம் குன்றி வந்திருந்தார். அவருக்கு ஆங்கில மருத்துவத்தில் விருப்பம் இல்லை. கேகே மற்றும் மதிகண்ணனின் வற்புறுத்தலுக்கு இணங்கியே சிகிச்சை எடுத்துக்கொள்ள சம்மதித்தார். ‘நான் ஒரு மாதிரி எல்லாத்துக்கும் தயார் ஆயிட்டேன் தோழர், இருக்கும் வரை இருந்துட்டு போயிடணும்’ என்றார். கேகே பதறிப்போய் அவரை சமாதானப்படுத்தத் தொடங்கினார். என் அப்பா கூட அடிக்கடி சொல்வார் ‘இருக்குற வரைக்கும் இருந்து யாருக்கும் தொந்தரவு கொடுக்காம போயிடணும்’ என்று. அப்படித்தான் இரண்டே நாள் காய்ச்சலில் இறந்துபோனார். சுப்புராயலுவும் அப்படியேதான்.
சுப்புராயலு தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் புரிந்துகொள்ள கடும் பிரயத்தனம் செய்துகொண்டேயிருந்தார். ஆனாலும் வயது அவரை விடவில்லை. ஒருவேளை ஒரு பத்து வயது குறைவாக இருந்து கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்திருந்தால் அவரது வீச்சு இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம். அது குறித்த பேச்சுக்களில் அவரை நாங்கள் ஒரு பதின்ம வயது சிறுவன் அப்பாவை நடத்துவதுபோல் ஒரு வித அலட்சியமாகவே நடத்தினோம் என்பதே உண்மை.
அவரது கவிதைத் தொகுப்பினை வெளியிடுவது என்று எடுத்த முடிவு அவரது உடல்நிலை காரணமாகவும், எங்கள் அலட்சியம் காரணமாகவும் தள்ளிக்கொண்டே போனது. அவரையும் தாண்டி தள்ளிப்போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்போதுதான் எங்கள் அனைவருக்கும் சம்மட்டியால் அடித்ததுபோல் அது உறைத்தது.
எல்லா மகன்களுக்கும் அப்பாவுக்கென்று ஒரு சட்டையாவது சுய சம்பாத்தியத்தில் வாங்கித்தர வேண்டும் என்ற ஆசை இருக்குமல்லவா, அது எனக்கு நிறைவேறவேயில்லை. பின்பு நான் வேலைக்குப் போனபிறகு முதல் சம்பளத்தில் ஒரு நூறு ரூபாயை எடுத்து அப்பாவின் புகைப்படத்தில் சொருகி வைத்த பிறகும் அந்த உறுத்தல் என்றும் என்னை விட்டு நீங்கவில்லை, இனியும் நீங்கப்போவதில்லை. அதுபோலவே சுப்புராயலுவின் புத்தகம் கொண்டு வரும் முடிவினை செயல்படுத்தாதது உறுத்திக்கொண்டே இருக்கப்போகிறது. சீக்கிரமே கவிதைத் தொகுப்பைக் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தாலும் அது அப்பாவின் புகைப்படத்தில் சொருகிவைக்கப்பட்ட நூறு ரூபாய்தானே?

கதையரங்கம்

வாய்ப்பிருக்கும் அனைவரும் வரவேண்டும்.
கதை சொல்வதற்கும்...
கதை கேட்பதற்கும்...

Friday, March 1, 2019

விழிப்புணர்வுக் கருத்தரங்கு

             இன்று ஆதி திராவிடர் நலத்துறை கல்லூரி விடுதி மாணவர்களுக்கான போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் விருதுநகரில் நடைபெற்றது. துணை ஆட்சியர் திருமிகு செல்வி லட்சுமி ப்ரியா தலைமை தாங்கினார்கள். போதை விழிப்புணர்வு கருத்தரங்கில் தோழர் பரிமளச்செல்வன், தோழர்.மதிகண்ணன் இருவரும் மாணவர்களிடையே எது போதை? எந்த போதை நம்மை வீழ்த்தும், எது நம்மை வழிநடத்தும் என கல்லூரி மாணவரிடையே அருமையாகப் பேசினர். இளம் பத்திரிகையாளர் நண்பர் விநாயக்பாபு வளர்ச்சிக்கான விஷயங்கள் பற்றிக் கலந்துரையாடினார். நிகழ்ச்சி நிறைவாக இருந்தது.