Tuesday, December 24, 2019

மாவிபக’வின் விமர்சன அரங்கமும் படைப்பரங்கமும்


மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்

விமர்சன அரங்கம்
படைப்பரங்கம்
2020 ஜனவரி 5ஆம் நாள்
மாலை சரியாக 5.30 மணி

அருப்புக்கோட்டை
பழைய பேருந்து நிலையம் அருகில்
அருஞ்சனை பிரஸ்


விமர்சன அரங்கில்…
பூமணி’யின் வெக்கை நாவல் குறித்து… கவிஞர் பாலா
‘அசுரன்’ திரைப்படம் குறித்து… தோழர் முனியசாமி

படைப்பரங்கில்… கவிதைகளுடன்…
தோழர் கேகே, தோழர் ரமேஷ், தோழர் மாணிக், கவிஞர் தமிழ்மணி, கவிஞர் ஜெயகணேஷ், புலவர் பா.ராஜேந்திரன், கவிஞர் பழனிக்குமார் - இன்னும் சிலர்

படைப்பரங்கில்… சிறுகதைகளுடன்…
தோழர் சத்யா, கவிஞர் பாலா, தோழர் கா.சி. தமிழ்க்குமரன், தோழர் மதிகண்ணன் – மற்றும் சிலர்

நிகழ்விற்கு தலைமை ஏற்க தோழர் அஷ்ரஃப்தீன்
வரவேற்க தோழர் ரமேஷ்
நன்றிகூற தோழர் ராமராஜ்
செல்லிடப்பேசி: 94431 84050, 94421 84060, 98659 55006 & 9884 86436

விருதுகள் 2019 - மாவிபக திட்டமிடல் கூட்ட முடிவுகள்



2017 டிசம்பர் 22ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் திட்டமிடல் அமர்வில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி
தோழர் கு.பா. நினைவு சிறுகதைத் தொகுப்புகள் விருதுக்காக தேர்வு நூல்களின் பட்டியலையும் தோழர் சுப்புராயுலு நினைவு கவிதைத் தொகுப்புகள் விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட நூல்களின் பட்டியலையும் நடுவர் குழு 2020 ஜனவரி முதல்வாரம் முடிவடைவதற்குள் ஒப்படைக்க வேண்டும்.
தேவையின் அடிப்படையில் நடுவர் குழுவின் சந்திப்பு 2020 ஜனவரி இரண்டாம் வாரத்தில் நடைபெறும்.
விருதுகள் 2019ன் முடிவுகள் பொங்கலை ஒட்டி நமது இணைய தளத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும்.
விருதுகள் வழங்கும் நிகழ்வு மார்ச் முதல்நாள் முழுநாள் நிகழ்வாக அருப்புக்கோட்டையில் நடைபெறும்.
2020 மார்ச் 1 – ஞாயிற்றுக் கிழமை
ü  விருதுகள் வழங்கும் நிகழ்வு தோழர் பாட்டாளியின் தலைமையில் நடைபெறும்.
ü  நடுவர் குழுவின் சார்பாக சிறுகதைத் தொகுப்புகளின் தேர்வு பற்றி தோழர் சத்யா, கவிதைத் தொகுப்புகளின் தேர்வு பற்றி தோழர் கேகே இருவரும் உரையாற்றுவார்கள்.
ü  விருதுபெறும் எழுத்தாளர்கள் தங்கள் ஏற்புரையை சமர்ப்பிப்பார்கள்.
ü  கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டி – நடுவர்குழு நிகழ்வு நாளில் அறிவிக்கப்படும். கவிதைகளுக்கான தலைப்புகள் முன்னதாகவே கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். கவிதை வாசிக்கும் மாணவர்கள் அடையாள அட்டையுடன் வரவேண்டும். வாசிக்கும் கவிதையின் ஒரு பிரதியை வாசிப்பதற்கு முன்னதாகவே, நடுவர் குழுவிடம் கொடுக்க வேண்டும்.
ü  சிறுகதை / கவிதைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெறும். சிறுகதைகள் குறித்து உயிர் எழுத்து இதழின் ஆசிரியர் தோழர் சுதீர் செந்தில் அவர்களும் கவிதைகள் குறித்து நவீன கவிதைகளின் முன்னோடிக் கவிஞர் தோழர் யவனிகா ஸ்ரீராம் அவர்களும் உரையாற்றுவார்கள்.
ü  இவர்களுடன் சிறுகதைத் தொகுப்பிற்காக விருதுபெற்றவர்களில் ஒருவரும் கவிதைத் தொகுப்பிற்காக விருதுபெற்றவர்களில் ஒருவரும் கருத்துரையாற்றுவார்கள்.
ü  நிகழ்விற்கு தோழர் மதிகண்ணன் தலைமை வகிப்பார்.
மேற்கண்ட மூன்று நிகழ்வுகளின் வரிசைப்படுத்தல் பின்னர் இறுதி செய்யப்படும்.
ü  நிகழ்வில் வரவேற்க தோழர் ராமராஜ்
ü  நன்றிகூற தோழர் அஷ்ரஃப்தீன் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Friday, December 20, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் சுப்புராயுலு நினைவு விருதுகளுக்காக
15. சந்திரா மனோகரன் அவர்களின்வெயில் விழுங்கும் வீடு
கவிதைத் தொகுப்பும் இணைந்துள்ளது.

Friday, December 13, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் சுப்புராயுலு நினைவு விருதுகளுக்காக
14. இராம இளங்கோவன் அவர்களின்வெளிச்சம் தேடும் வேர்கள்
கவிதைத் தொகுப்பும் இணைந்துள்ளது.

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக
21. இராம இளங்கோவன்  அவர்களின்
குழந்தைகளுடன் குழந்தையாய்…சிறுகதைத் தொகுப்பு ம் இணைந்துள்ளது.


மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக
20. க.மூர்த்தி  அவர்களின்
கள்ளி மடையான்சிறுகதைத் தொகுப்பு ம் இணைந்துள்ளது.

Tuesday, December 10, 2019

வண்ணம் - சத்யா


வெள்ளைநிறத்தில் சிகப்பும் நீலமுமாய்
வண்ண விளக்கெரியும்
பேருந்தைக்கண்டு
கைகளைத் தட்டியபடி
துள்ளிக்குதித்து அந்தக் குழந்தை சொல்கிறது
ம்மா இது பத்தூவா

மஞ்சள் நிறத்தில் கருப்பு ஸ்டியரிங் வைத்த
எலக்ட்ரிக் காரைக் கண்டு
அதனுடைய கண்கள் அகல விரிய
மேல் வரிசையிலும் கீழ் வரிசையிலும்
நான்குஜோடிப் பற்கள் தெரிய சிரித்தபடி
அதை உற்றுப்பார்த்து சொல்கிறது
ம்மா இது பத்தூவா

சாவி கொடுத்தால்
பக்கவாட்டில் ஆடி ஆடி
கையிலிருக்கும் டமாரத்தில்
டமடம டமடம டம் என்று ஓசை எழுப்பும்
காதுகள் வானை நோக்கி உயர்ந்த
கொழுகொழு கன்னங்களுடன்
பற்களெல்லாம் தெரிய
பிறைபோல் வாய் திறந்து
சிரிக்கும் பிங்க் நிற முயலிடம்
அதைப்போலவே பக்கவாட்டில்
ஆடியாடி சிரித்துவிட்டு சொல்கிறது
ம்மா இது பத்தூவா

புஜ்ஜியின் கையை ஒரு கையால் பிடித்து
இன்னொரு கையால் மலையைக் காட்டி
முதுகில் ஊதா நிற பையோடு நடக்கும்
முட்டைக்கண் டோராவின் படம்போட்ட
ஸ்கூல் பையை
அம்மாவின் சுடிதாரைப் பிடித்து
இழுத்து காட்டிவிட்டு சொல்கிறது
ம்மா இது பத்தூவா

சிவப்பு கார்
கருப்பு குதிரை
பச்சை தவளை
வெள்ளைக் கரடி
நீலம்
காவி
மஞ்சள்
ஆரஞ்சு
என எல்லா நிறங்களையும் பார்த்து
குதூகலித்துச் சொல்கிறது
ம்மா இது பத்தூவா

அவசரமான வரட்டுப் புன்னகையைக் கொட்டிவிட்டு
நிறக்குருட்டுக் கண்களால்
கருப்பு வெள்ளையாய் ஒட்டப்பட்ட
விலைச் சுட்டியை உற்றுப் பார்க்கிறார்கள்
பத்து ரூபாய்க்குமேல் மதிப்பு தெரிந்தவர்கள்

000 000 000

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக
19. ஞா.கலையரசி  அவர்களின்
புதிய வேர்கள்சிறுகதைத் தொகுப்பு ம் இணைந்துள்ளது.

Monday, December 9, 2019

சட்டை - சத்யா


தண்ணீர் தீர்ந்த நெகிழி போத்தலைக்
கசக்கியதுபோல்
படபட ரரரரவென்னும்
காது கூசும் புலம்பல்

'எங்கே... எங்கே...'
ரம்பமாய் கிழிக்கும்
நரிகளின் பேரழுகை

'காணோமே காணோமே'
நெருப்புக் காற்றின்
மூங்கில் கீதமாய்
யாக்கை உருகும் அழுகை

மழைவழியும் தகரமாய்
காதுக்குள் வழிந்தது

'என்ன காணோம்?' என்றதற்கு
விசும்பலை அடக்கி
'அழகான
அருமையான
பளபளக்கும்
முப்பாட்டன் தந்து
நான்
பொத்திக்காத்த ரத்தச்சட்டை' என்றது

'ரத்தமா? யார் ரத்தம்?'
'யாருடையதோ நான்தான் காப்பான்'
'களவு போனதா?'
'இல்லை'
'கிழிந்து போனதா'
'இல்லையில்லை'
'சாயம்போனதா?'
'இல்லவேயில்லை'
'பிறகு'
'நான்தான் எறிந்தேன்'

அவசரமாய் சுரண்டி
மண்ணுக்குள் கைவிட்டு
முக்கி இழுத்தது

'இதோ... இதோ'

வட்டக் குழலாய்
சிவப்புத்துணியொன்று
கையோடு வந்தது

'வலக்கையை வைத்துக்கொண்டேன்'
குட்டியை நக்கும் பூனையாய்
தடவிக் கொடுத்தது
பின்பு எக்காளமாய்ச் சொன்னது
'மிச்சமீதிகளை எறிந்துவிட்டேன்'

திடீரென
மழை பெய்ந்த சாலையாய்
அவசர கருமையை அப்பிக்கொண்டு
ஓ... வென்றழுதது
'அது காணோமே'யென்று

தேடிச்சலித்து
கை உதறி
மண் தெறித்து எழுந்தது

'எனக்கு எல்லா சட்டையும் சேரும்
எனக்கு மட்டும்தான் எல்லா சட்டையும் சேரும்
சிவப்பு சட்டை
கருப்பு சட்டை
நீல சட்டை
பச்சை சட்டை
ஏன் காவிச் சட்டை கூட எனக்கு சேரும்'

கழுத்து நரம்பு புடைக்க
கை முஷ்டியை மடக்கி
வான்நோக்கி காற்றில் குத்துவிட்டபடி
வலக்கை துணிகொண்டு
குறி மறைக்க இயலாமல்
அக்குளில் அடக்கி
குறிகள் குலுங்க குதித்து சொன்னது

'எனக்கு எல்லா சட்டையும் சேரும்
எனக்கு மட்டும்தான் எல்லா சட்டையும் சேரும்'
சுய அம்மணத்தை சட்டை செய்யாமல்
000 000 000

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக
18. கிருஷ்ணமூர்த்தி  அவர்களின்
காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு
சிறுகதைத் தொகுப்பு ம் இணைந்துள்ளது.