Saturday, April 27, 2019

+2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி 2 - வாடிபட்டி

நகர்புர மாணவர்களைக் குறிவைத்து பத்திரிகைகள்/ நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்களின் உதவியோடு பெருந்திருவிழாக்களாக எதிர்காலப் படிப்பு பற்றிய நிகழ்வுகளை நடத்துகின்றனர். ஆனால், அவர்களுக்கு கிராமப்புர மாணவர்களைப் பற்றிய கவலையில்லை. காரணம் தெரிந்ததுதான்.

இந்த சூழலில் தடுமாறும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்குமாக இதுபோன்ற நிகழ்வுகளை மதுரை மாவட்ட அகில இந்திய மாணவர்கள் கழகம் அமைப்பாக்குகிறது. இந்த ஆண்டு, 2 நிகழ்ச்சி நடத்த வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு ஆதரவளித்த பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றி. முதல் நிகழ்வு ஏப்ரல் 10 ஆம் நாளும் இரண்டாம் நிகழ்வான இந்தக் கருத்தரங்கம் 2019 ஏப்ரல் 24ஆம் நாளும் நடைபெற்றது.

மிகுந்த அக்கறையுடன் நிகழ்ச்சியை நடத்தித் தந்த பேராசிரியர்கள்Royam Murali, Sundaram Dinakaran, முத்துவேல், literate Frog கல்வி பயிற்சி நிறுவனத்தின் ஜெயந்தன், Kanmani Sat, மானுட விடுதலை பண்பாட்டு கழகத்தின் மதி கண்ணன் ஆகியோருக்கு நன்றி.

கிராமப்புரத்தின் அறியாமை இருளைக் களைவது முன்னேற்றத்திற்கான முன்நிபந்தனை என்பதை நிகழ்ச்சியில் குறிப்பிட்டார் மாணவர் கழக அமைப்பாளர் தோழர் Thamizh PPathi

நிகழ்ச்சிக்காக அயராது பாடுபட்ட மாணவர்கள் சுகுமார், (+சுகுமாரின் பெற்றோர்கள்) குருமூர்த்தி, இவர்களுடன் சேர்ந்து 2வது நிகழ்ச்சியும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அமிர்தவர்ஷன், திரளாக வந்த பெண் மாணவர்களை அமைப்பாக்கியவர்கள், Gandhigram Rural Institute Deemed University பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள் கேள்வி எழுப்பிய Anu Sreeஎன அனைவரும் அளப்பரிய பணி ஆற்றியுள்ளனர்.

எந்த அடையாளமுமின்றி, நிகழ்ச்சிகளுக்கான அனைத்து வேலைகளையும் பார்த்தார் ஏழை மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர் தோழர் Sridhar Sridhar. (எழுத்து வடிவம் - மதிவாணன் முகநூல்)

















கதை சொல்லல் பட்டறை - இரண்டாம் நாள்

அருப்புக்கோட்டை Green Wisdom பள்ளியில் மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று நடத்திய மாணவர்களுக்கான இரண்டு நாட்கள் (2019 ஏப்ரல் 20 மற்றம் 21) நடைபெற்ற கதை சொல்லல் பட்டறையில் இரண்டாம் நாள் மாணவர்கள் ஐவர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். குழுக்களை தோழர்கள் சத்யா, கோபால், ரமேஷ், திரு, அஷ்ரஃப், கேகே வழிநடத்தினார்கள். மாணவர்களின் குழுக்கள் தாங்களே உருவாக்கிய கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இதில் ஒரு குழு தங்கள் கதையை நடித்தும் காட்டினார்கள்.  இரண்டாம் நாள் பட்டறையின் சில காட்சிப் பதிவுகள்.