Monday, August 8, 2011

ஜெயகணேஷ் – கவிதைகள்


தீர்ந்தபாடில்லை
மிச்சமிருக்கும்
வார்த்தைகள்

புத்தகப் பையை
துழாவும் போதெல்லாம்
கிடைக்கும்
கடேசி சில்லறை காசாய்
ஒவ்வொரு முறையும்
கிடைக்கும் வார்த்தைகள்

யாரேனும் வாசிக்கும் போது
கவிதையாகி விடும் வார்த்தைகள்

யாருக்கேனும் வாசிக்கும் போது
கானலாகிவிடும் வார்த்தைகள்

என் வார்த்தைகளா?
எனக்கான வார்த்தைகளா?
என் வழியிலான வார்த்தைகளா?

ஏதென்று அறியாமல்
நான் வார்த்தைகளற்று…!


விளையாட்டாய்

ஒரு
கவிதை சொல்
என்றேன்

முதுகில்
மூன்று அடி
கொடுத்தாள்

திருக்குறளை விட
ஒரு அடி
அதிகம்தான்

திருக்குறள் அல்ல

பள்ளம் மேடு நிறைந்த சாலை
பாதை தேடும் நடுத்தரம்
0
இன்னும் தொடங்கவே இல்லை என்றது
கவிதையின் கடைசி வரி.

(2011 ஆகஸ்ட் 7ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக‘வின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதைகள்)

No comments:

Post a Comment