Tuesday, April 16, 2019

கிராமப்புற மாணவர்களுக்கான கல்வி - வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கம்











2019 ஏப்ரல் 10ஆம் நாள் வாடிபட்டி K7 அரங்கில் கிராமப்புற மாணவர்களுக்கான பள்ளிக் கல்விக்குப் பின்னதான கல்வி வாய்ப்புகளும் அவற்றின் பயன்களும் பலன்களும் தொடர்பான கல்வி -வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை  மதுரை AISA நடத்தியது.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தோழர் தமிழ்ப்பதி மற்றும் தோழர் மதிவாணனின் வழிகாட்டுதலின்படி +2 மாணவர் தோழர் சுகுமார் செய்திருந்தார். நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

தோழர் தமிழ்ப்பதியின் வரவேற்புரையின் தொடர்ச்சியாக தோழர் மதிவாணன் நோக்கஉரையாற்றினார். தோழர் மதிகண்ணனின் தயக்கம் தவிர்க்கும் பங்கேற்புச் செயல்பாட்டைத் தொடர்ந்து Liberation Frog தோழர் குகனும் திருமிகு ஜெயந்தனும் கல்வி மற்றும் வேலைக்கான வாய்ப்புகளைப் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

பங்கேற்பாளர்களில் நால்வர் கருத்தரங்கம் பற்றிய தங்கள் கருத்துக்களைப்  தோழர் சுகுமாரின் நன்றியுரையுடன் நிறைவுற்ற கருத்தரங்கம் கிராமப்புற மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாகவும் விடுபட்ட பிற மாணவர்களுக்குமான இன்னொரு நாள் நிகழ்வை நடத்த வேண்டும் என்ற பங்கேற்பாளர்களின் வேண்டுகோளுடன் நிறைவுற்றது.

No comments:

Post a Comment