Thursday, June 25, 2015

மருளாடி - கா.சி.தமிழ்க்குமரன்

கொட்டுச்சத்தம் அந்த இடத்தையே அதிரவைத்துக்கொண்டு இருந்தது. உடம்பெல்லாம் வியார்வை வழிய கொட்டே கிழிந்துவிடும்படி உயிரைக் கொடுத்து வெளுத்து வாங்கிக்கொண்டு இருந்தனார். ஊவாங்கொட்டுக்காரார். ….….என்ற இழுவைச்சத்தம் திடும்  திடும்   என்றுவிழும் கொட்டின் சத்தத்தைத் தூக்கியடித்தது. பீப்பீக்களின் சத்தம் காத்தைக் கிழித்து காதைக் கிழித்தது. ஊர்க்கூட்டம் மொத்தமும் அலங்காரிக்கப்பட்ட கிராமதேவதையின் கோவிலுக்குமுன். சிறுவர்கள் கொட்டுக்காரார்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க உடல் புல்லரிக்க பெண்களின் குலவைச்சத்தம் விடாமல் மாறிமாறி ஒலித்துக்கொண்டு இருந்தது. கூட்டத்தின் நடுவே வெற்று உடம்பில் வௌர்ளை வேட்டி தார்ப்பாய்ச்சி கட்டியிருக்க அவ்வேட்டி மஞ்சள் தண்ணீர் ஊற்றியதால் மஞ்சள் வேட்டியாய் மாறியிருந்தது. செருப்பில்லா அவ்வொற்றை உடையுடன் கையில் வேப்பங்குலையுடன் கண்மூடி அசையாமல் நின்றிருந்தார் மருளாடி. இன்னும் அருள் வந்து இறங்கவில்லை. கொட்டுக்காரார்கள் இன்னும் வேகமாய் அடித்துப்பார்த்தார்கள். இரண்டு பீப்பீக்காரார்களும் கழுத்துநரம்புகள் புடைக்க தம்கட்டி இரண்டுபுறமும் காதில் சென்று உச்சஸ்தாயியில் உடம்பில் உள்ள காற்றே வெளியேறிவிடும் போல நெடுநேரம் தம்கட்டி ஊதினார்கள். ஊவாங்கொட்டுக்காரார் இழுஇழு என்று இழுத்துப்பார்த்தார். ம்.. ஒருஅசைவும் இல்லை. குத்துக்கல்லாய் நின்றுகொண்டிருந்தார் மருளாடி.
என்னய்யா ஒருநாளும் இல்லாத திருநாளா இருக்கு. எந்த வருசமும் இப்படி ஆனதில்லையேய்யா…’‘அதானேஆத்தாவந்து இறங்குவேனான்னு அடம்பிடிக்கறா பாருங்களேன்’. ‘இப்பவே மொதக்கோழி கூப்புடுற நேரமாச்சு. இன்னமே சட்டிஎடுத்து ஊர் சுத்தி வரணும்….’

ஆமா சட்டி கொண்டு செலுத்திட்டுத்தானே மத்தவேலைகளை ஆரம்பிக்கமுடியும்.’
ஆத்தாளுக்கு என்ன கொறவச்சோமுன்னு  இப்பிடி சோதிக்கிறான்னு தெரியலியே’.
பெண்களின் குலவை நாவறள சுதிகுறைந்து சத்தம் குறைந்து கொண்டே வந்தது. ஒவ்வொருவரின் முகத்திலும்கவலையின் ரேகைகள் படரஆரம்பித்தது.
உணார்ச்சி வசப்பட்ட சிலர்ஆத்தா நாங்க தெரிஞ்சும் தெரியாம ஏதாவது தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சுக்க தாயி. நெடுஞ்சாங்கிடையாய் மண்ணில் விழுந்து கண்ணீரை உகுத்தார்கள்.
       இந்த அசாதரணமான நிகழ்ச்சியைப் பார்க்க சிறுவார்களுக்கு பயம் வந்து விட்டது. தன் தாய் தந்தையரின் பின்னே ஒளிந்து கொண்டு மிரட்சியுடன் ஒருகண்ணால் எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அந்த அதிகாலை வேளையில் கோவிலைச் சுற்றி கட்டப்பட்டிருந்த டியூப் லைட்டுகள் இரவை விரட்டியடித்துக் கொண்டு இருந்தன. லைட்டைச் சுற்றிலும் சிறுபூச்சிகளும் வண்டுகளும் கொய்யென்று சுற்றிக்கொண்டு இருந்தன. கோவிலுக்கு மக்கள் கூட்டம் வருவதும் தங்களுக்குள் குசு குசுவென பேசிக்கொள்வதுமாய் இருக்க நேரம் கடந்துகொண்டிருந்தது.
ஏம்ப்பா மருளாடி வெரதமெல்லாம் எப்பிடி….. சரியாத்தானே இருந்தாரு’.
யோவ் வாயக்கழுவுய்யாஎதச்சந்தேகப்பட்டாலும்படலாம்…. வெரத விசயத்துல பத்தரமாத்து தங்கமுய்யாகாப்புகட்டுனதுல இருந்து நேத்து வரைக்கும் பச்சத்தண்ணிபல்லுலபடாம ராத்திரிக்கு ரெண்டேரெண்டு வாழைப்பழத்தோட வெரதத்த முடிக்கிறவரப் பாத்து இப்பிடிப்பேசுனா நம்மநாக்கு அழுகிப்போயிடும். வெரத விசயத்துல அப்பிடி ஒரு சுத்தபத்தம்’.
‘அதெல்லாம் சரிதான்….பின்னே ஆத்தா சோதிக்கிறதுக்கு ஏதாவது காரணம் வேணுமில்ல’.
ஆளாளுக்கு கூட்டத்தில் பேச்சும் சலசலப்புமாக முடிவின்றி நீண்டுகொண்டிருந்தது.
கருப்பாயி கூட்டத்தோடு கூட்டமாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு நேரந்தான் ஒத்தைக்காலிலேயே பொறுப்பாய் நிக்கிறது. கால்மாத்தி நிக்கிறதுக்கு அந்தக்காலின் வீக்கம் குறைந்திருந்தாலும் வலி இன்னும் விடவில்லை. போனமாசம் நடந்ததை நெனச்சுப்பாத்தா கால்வலியைவிட மனவலிதான் நெஞ்சைப் பிசைந்தது. கட்டைவண்டியில சொறுகியிருந்த ஊணுகம்பைப் புடுங்கி அடிச்சதுல காலே ஒடைஞ்சதுபோல வலி. நாலுநாள் படுத்த படுக்கைதான். ஊருநாட்டுல எந்தப்பொம்பளதான் இந்தக்கோலத்துல இப்பிடி பாத்துட்டு சும்மா இருப்பா. வெளிய தெரிஞ்சா வெக்கக்கேடு. காட்டுலயே ஒருமூச்சு பேசாத பேச்செல்லாம் பேசி நாறடிச்சுட்டுத்தான் வீட்டுக்கு வந்தா. அப்பவெல்லாம் கம்முன்னுவந்த பய வீட்டுக்கு வந்து மனசுதாங்காம ரெண்டு வார்த்தையவிடவும் எங்க இருந்துதான் அம்புட்டுவௌம் வந்துச்சோ ஒத்தப்பேரி பொம்பள என்ன செய்வா பாவம். அடிவாங்குனதுதான் மிச்சம். நாலுநாளாய் உயிர்போய் உயிர் வந்தது. காட்டுல சோளக்கதிர் அறுக்கவந்த மேகாட்டுக்காரியை காட்டுலயேவச்சு…. சே….. நெனச்சுப் பாத்தாலும் இன்னும் அருவருப்பா இருக்கு. எதவேணாலும் பொம்பள விட்டுக்கொடுப்பா. இத விட்டுக்கொடுப்பாளா…. காட்டுல பேசாத பேச்சையெல்லாம் செவனேன்னு கேட்டுட்டு இருந்துட்டு ஊருக்குள்ள நாலுபேருக்கு தெரிஞ்சுடுமுன்னு கோவமயித்துல அடியானஅடி பேதியில போகுறபய…. தூ…..குடிக்கி…. இவஞ்செஞ்ச கூத்துக்கும் என்னைய இப்பிடி அடிச்சதுக்கும் எங்கூடப் பொறந்த பொறப்புன்னு இருந்திருந்தா தூக்கிப்போட்டு வகுந்துருக்க மாட்டாங்க. ஒத்தப்பேரிங்கறதுனால இந்தப்போடு போடுறசன்னமான அடியாமாட்டப் போட்டு அடிக்கிற மாதிரி. மனுசந்தானா நீயெல்லாம் ஊருக்குள்ள வெள்ளைளையுஞ் சொள்ளையுமா அலையுறபுள்ளைங்க தலையெடுத்திருந்தாக்கூட ஏன் எதுக்குன்னு சிண்டப் புடிச்சிருக்கும். கைக்குள்ளயும் காலுக்குள்ளயும் சின்னப் புள்ளைங்க காலைக்கட்டிக்கிட்டு தேமித்தேமி அழுதுச்சுக பாவம். அதுக மொகத்தாச்சனைக்காச்சும் விட்டானா பாவிப்பய. இருடீ இன்னும் நாலுவருசந்தான் அப்புறம் எம்பயலுக ஒன்னை என்ன செய்யுறாங்கன்னு பாரு. மனசுக்குள் இன்னும் வெஞ்சினம் தீரவில்லை. அனிச்சையாய்க் காலைத்தடவிப் பார்த்தாள் கோடாய்  வீக்கம் கைக்குத் தட்டுப்பட்டது.
ஆத்தாளுக்கு ஏதோ கொறையிருக்கு. அதான்  வந்து எறங்க மாட்டேங்குறா
அது என்னான்னு ஆத்தா வந்து எறங்குனாத்தானய்யா தெரியும்
ஊவா….ஊவாஇழுப்பு தேய்ந்து கொண்டிருந்தது. கொட்டுகாரார்கள் முக்கிமுக்கிஅடித்து கை வலித்ததுதான் மிச்சம். ஆளாளுக்கு தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஆத்தா வந்து எறங்குற மாதிரி தெரியவில்லை.
ஏய் நிறுத்துங்கப்பா கொட்ட”.
இப்பிடியே அடிச்சுக்கிட்டே இருந்தா ஒன்னும் நடக்காது ரெண்டு எளவட்டபயக போயி பழையஆளைக் கூட்டிட்டு வாங்கப்பா”.
வேகமாய் ரெண்டுபோர் ஊருக்குள் ஓடினார்கள். கொட்டுக்காரார்கள் உடம்பில் வழிந்த வோர்வையைத் துண்டால் துடைத்துக் கொண்டனார். அந்த விடியக்காலையில் ஊவாங்கொட்டுக்காரார் கொஞ்சம் தண்ணி ஊத்துங்கசாமி எனக் கேட்டு இருகைகளையும் சேர்த்துப் பிடித்து விழுந்த தண்ணீரை முழங்கைகள் வழியே ஓட குடித்து நிமிர்ந்தபோது வேர்வையும் தண்ணீரும் கலந்து கீழே வழிந்தோடியது.
கன்னம் ஒடுங்கிப்போய் நெடுநெடுவென உயரமாய் நடக்கமாட்டாமல் நடந்துவந்த பழையமருளாடியை கைத்தாங்கலாய் ரெண்டுபோர் அழைத்துவந்தார்கள். ஆத்தாவைப் பார்த்து ஒருநிமிடம் கண்ணை மூடி நெக்குருகி வணங்கியபோதே உடம்பெல்லாம் சிலிர்த்துக் கொண்டது பழையவருக்குபுதுமருளாடியை முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்கள். மஞ்சத்தண்ணி ஊத்தி ஊத்தி உடம்பு வெடவெடவென மெல்லியதாய் நடுங்கியது. பூசாரி திருநீறு பரப்பிய சூடத்தட்டுடன் பக்கத்தில் நிற்க பழையவர் ம்ம்…..என உறுமிக்கொண்டே சூடத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு தளார்ந்த உடம்பு விரைக்க திடீரென்று ஏய்….. என்று சத்தம் போடவும் அருகில் இருந்தவார்கள் ஒருகணம் திடுக்கிட்டுத்தான் போனார்கள். தட்டில் இருந்த திருநீரை கைப்பிடி அள்ளி தன்தலையில் தூவிக்கொண்டு புதுமருளாடியின் நெற்றியில் ஒரேஅடி. பக்கத்தில் இருந்தவார்கள் பயந்து விலகசொல்லாத்தா சொல்லு….  கொறையச்சொல்லு.. இப்பிடியே மசமசன்னு நின்னுக்கிட்டு இருந்தா ஒம்புள்ளைகளுக்கு என்ன தெரியும்…..  கண்கள் சிவக்க நாக்கை துருத்தி மடித்து கடித்தபடி ம்..ம்….எனப்பெருமூச்சுவிட புது மருளாடியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. ‘நீ வந்து சொன்னாத்தானே தெரியும் வர்றியா இல்லையா.. இப்ப நீ இறங்கி வராட்டாநாஞ்சும்மா இருக்கமாட்டேன்ஆமா…’ஆத்தாளுக்குச் சவால் விட்டார்.
மருளாடியின் உடல் லேசாய் சிலிர்த்தது. கால்தசைகள் நடுக்கமெடுத்தது. உடலைகுறுக்கி இரண்டு கைகளையும் முறுக்கி குனிந்து வில்லாய் வளைத்து நின்றார். கன்னத் தசைகள் துடித்தது.
டேய்….அடிங்கடா கொட்ட
இதற்காகவே காத்திருந்ததுபோல வீறுகொண்டு எழுந்த கொட்டுக்காரார்கள் அந்த இடத்தையே ரணகளமாக்கினார்கள். ‘டேய்என்ற சத்தத்துடன் கண்களில் கோபம் கொப்புளிக்க மருளாடியின் கால்கள் அந்த இடத்தைச் சுழன்றாடியது.  “ஆத்தா வந்துட்டா” “ஆத்தாவந்துட்டா”“தாயிவந்துஎறங்கிட்டாசந்தோசப்பெருக்கில் மக்கள்தம் கைகளை தலைக்குமேல் குவித்து நெக்குருகி நிற்கும் வேளையில்
டேய் நிறுத்துங்கடாகொஞ்ச நேரத்தில் தஸ் புஸ் என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.
கொட்டுச் சத்தம் நின்றது.  எல்லேரையும் சுற்றி ஒருமுறை பார்வையைச் சுழற்றியபடி
போனவருசம் சொன்னது என்னாச்சுடா
ஆத்தா சொன்னாத்தானே தெரியும்
ஆத்தாவுக்கு திருவாச்சி வாங்கி வைக்கிறதா சொன்னீங்களே என்னடா ஆச்சு
ஆத்தா உனக்குத் தெரியாதா போனவருசந்தான் மழதண்ணி இல்லாம் பஞ்சமாப் போச்சுல்ல. ஊர்ச்சனமே பொழப்பத்தேடி வெளியூருக்குள்ள போயிட்டாங்க. எதுராவுக்கு ஒங்கடனை செஞ்சு முடிச்சுடுறோம் தாயி”.
அது எப்புடிடா என்னைய மறக்கலாம்
தப்புத்தான் தாயி ஒம்புள்ளைகள நீதான் மன்னிக்கணும்
மக்கள் கூட்டமே காலில் விழுந்து வணங்க ஆத்தா கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தாள். முகத்தில் கொப்புளித்த கோபம் குறைந்துஅடிடா கொட்டமீண்டும் அருள் ஏறியது. வேப்பஞ் சிறாய்களில் நிரப்பப்பட்ட அந்த மண்ணாலான அக்கினிச்சட்டி நல்லெண்ணையின் தீ நின்று எரிந்தது. கோவிலுக்குள்ளிருந்து எடுத்துவந்த சட்டி பூசாரியிடமிருந்து மருளாடிக்கு கைமாற அக்கினியின் தனல் சும்மா வானத்துக்கும் பூமிக்குமாய் சொலித்தது. ஆட்டமென்றால் அப்படி ஒரு ஆட்டம். ஊரே வைத்தகண் வாங்காமல் பக்திப் பரவசத்தில்.
ம்நடங்கய்யா கௌக்கு வெளுக்குதுஊர்சுத்திவரணுமுல்ல.ம்..நடங்கநடங்க
ஒவ்வொரு வீடாய்ச் சென்று அருள் பாலித்து முதுகில் தண்ணீர் வாங்கிச் சென்றார் மருளாடி. ஊர்ச்சனமே பின்தொடர்ந்தது. அந்தக்கடைசி வீட்டில் சாமிக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றும் போதே அந்தப் பெண்ணுக்கு அருள்ஏறி ஆட ஆரம்பித்தாள். சுற்றிச்சுற்றி வந்து அக்கினிச் சட்டியைக் கேட்டு கைநீட்டினாள். மருளாடி மறுக்க விடாப்பிடியாய் சுழன்று சுற்றி வந்தாள். ஒரு கட்டத்தில் திருநீற்றை அள்ளி தலையோடு சேர்த்து ஒருஅடி. ‘அடங்குஅடங்குஆத்தா சொல்றேனுல்லம்…”அந்தமானிக்க அடங்கியது. சலிக்காமல் கொட்டுக்காரார்கள் வெளுத்து வாங்கினார்கள்.
ஓவ்வொரு பொங்கலுக்கும் மருளாடி வீட்டுக்காரிங்குற கெத்துல கருப்பாயி மொகமெல்லாம் பூரிப்போட ஊரைசுத்தி வருவாள்.  இந்த வருசம் மனசுக்குள்ள திகுதிகுன்னு எரிஞ்சது.  நெசமாத்தான் ஆத்தாவந்து எறங்குறாளாஆத்தா மேலயே சந்தேகம் வந்தது.
 மேகாட்டுக்காரிட்ட ஆத்தா நல்லா வந்து எறங்குறால்ல”.
இன்னைக்கு நேத்தா அவ வந்தகாலந்தொட்டு ஆடத்தானப்பா செய்யுறா”.
      தூ….. எனகாரித்துப்பிவிட்டு ஒருகாலை மெதுவாய் பொத்தி பொத்தி தன் வீட்டை நோக்கி நடந்தாள் கருப்பாயி.
(2015 ஜூன் 21 அன்று நடைபெற்ற படைப்பரங்கில் வாசிக்கப் பெற்ற சிறுகதை)

No comments:

Post a Comment