Friday, February 3, 2012

உடைபடும் மௌனம் - செல்வா

பேசிய வார்த்தைகள்
சுற்றித் திரிந்த இடங்கள்
கனிவான விசாரனைகள்
கலைந்து சென்ற பொழுதுகள்
இனமறியாப் புன்னகை
இவை
நட்பின் சிதறல்கள்

ஏதும்
எதிர்பார்க்காப் பொழுதுகளில்
ஏதோ ஒன்று
எண்ணங்களில்
உணர்வுகளில்
விளைகிறது

அவை
பூமிக்குள்
அகப்பட்ட விதைகளின்
முளைகள்போல்
மண்ணை முட்டுகிறது

நீண்ட சந்திப்புகளில்
பேச நினைத்து
தவறிய வார்த்தைகள்
பார்வையால் வீசுகிறது
இதழ்களுக்கிடையில்
சிக்கிய வார்த்தைகளை

பூமியைப் பிளந்த
முளைகளைப் போன்று
உடைபடுகிறது
மௌனம்
(மாவிபக – படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

1 comment: