Saturday, February 4, 2012

கவிதைகள் – பா.ராஜேந்திரன்

ஒன்று
விரித்து வைக்கப்பட்ட போர்வைபோல
வரி வரியாய்
பட்டாசுத் திரிகள்
பாதையெங்கும்

அவ்வழியே வரும்
கால்கள் அனைத்தும்
விலகிச் செல்கின்றன
கரிமருந்துக் கரங்களின்
உழைப்பிற்குத் தலைசாய்த்து

இரண்டு
திருவிழா நடத்திட கட்டாய வசூல்
மக்களைத் தொல்லைப்படுத்தும்
நிர்வாகிகளைக் கண்டித்திட
காவல்நிலையம் வந்த நபர்
திகைத்து நின்றார்

புறநகர் காவல் நிலைய
நுழைவு வாசலில்
கைகள் கட்டி
கைதிகள் போல் நின்றிருந்தனர்
காவல்துறை அதிகாரிகள்
புதிதாய் அமைக்கப்பட்ட
கடவுளர் சிலையினைச் சுற்றி.

மூன்று
யாராக இருக்கும்
பக்தனின் மனம்
பதை பதைத்தது
வீட்டு வாசலில் அறுக்கப்பட்ட
எலுமிச்சை
(மாவிபகவின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதைகள்)

No comments:

Post a Comment