Thursday, February 2, 2012

தீபாவளிப் பொழுதுகள் - செல்வா

வேகமாய்
இயங்கிக்கொண்டிருக்கும்
பஞ்சாலை நகரம்

அரக்கப் பறக்க
வீடு திரும்பிக் கொண்டிருக்கும்
ரேகை தேய்ந்த தொழிலாளர்கள்

யாராவது
வாங்க மாட்டார்களா என
நடைபாதை வியாபாரிகள்

ஈ மொய்க்கும்
உயர்தர வர்க்கத்தின்
நகைக்கடைக் கூட்டம்

ஊழல் பெருத்த உள்ளாட்சித் தேர்தலின்
சிலநூறுக்கு விலை பேசப்பட்ட
ஓட்டுப் பணத்தின் திமிர்
ஜவுளிக்கடைகளில்

அலுவலகம் சென்று
நடை தளர்ந்து
பேருந்து நிறுத்தத்தில்
நடுத்தர வர்க்கம்

மழை நின்றும் தூவானத்தில்
நோட்டமிடுகிறது
சிதறி ஓடும்
நடைபாதை வியாபாரியின் வாழ்க்கை
பறிபோனதை

ஒவ்வொரு தீபாவளியின் போதும்
இவர்களின் வாழ்க்கை இப்படித்தான்
தொடங்குவதும் முடிவதும்

நடுத்தர மேல்தட்டு வர்க்கத்தின்
கையில்
தீபாவளி ஆடை.
(மாவிபக – படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment