Wednesday, February 22, 2012

விடியல்

 
நாளைய
சூரிய உதயத்தைப்
பார்ப்போமா என்று தெரியாது ....

நாளைய
தேவைகளுக்காக
இன்று திட்டமிடுகிறோம் ...

இன்றுக்காக
நேற்றுத் திட்டமிட்டோம்
வறண்டு போனது பொழுது மட்டுமல்ல
வயிறும் தான் .

ஒவ்வொருப்  பொழுதும்
இருள் சூழ்ந்து கிடக்கிறது
எங்கள் மேனிறத்தைப் போன்று...


தேனிக்கள்
ஒவ்வொரு பூக்களின் மீதமர்ந்து 
மொள்ள உறிஞ்சி 
சேகரித்த தேனையும்
கூட்டையும் களைத்த வேடனாய் 
அதிகாரத்தின் தோட்டாக்கள்
துளைத்தெறிகின்றன
எங்கள் வாழ்க்கையை.

பறித்து   செல்லும்
அதிகாரத்தின்  வேர்களை 
 அறுத்தெறிய
எங்களை நோக்கி  
அணிச்சயம்  செய்யும்
தோட்டாக்களை
இதயமென்னும் மெகசின்களில்
அடுக்கி வைத்துள்ளோம்

விடியலில்
அதிகாரத்தை
கைப்பற்ற ...

(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக நடத்திய படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment