Sunday, February 19, 2012

மனங்கள்... - செல்வா

இரு விழிகள்
இசைவில்
மௌனம் பிறக்கிறது

அலங்காரமற்ற
வர்ணம் தீட்டா  வார்த்தைகள்
நிர்வாணமாய்

மயிர்கள் 
நிலை  பூத்து
தடுமாறுகின்றன

பட்டாம்பூச்சியின்
சிறகசைப்பைப்  போன்று
பரிதவிப்பில்
மெய் சிலிர்க்கிறது 
நிசப்தம்

விழிகள்
இளஞ்சிவப்பாய்  
கருணையற்ற சித்தரவதையில்  
தாளாமல் தவழுகிறது
உவர் நீரில்

ஆனந்தம்
அன்பின் பரிமாணம்
துயரம்
தவிப்பு
நிலை தடுமாறும்
கணங்கள்

புரண்டோடும்
இனங்கான முடியாத
இன்னொரு மொழியில்
இன்னும் பெயரிடப்படாத
பேச்சு   மொழி
எழுத்து   மொழிக்கு   முன்
இயற்கை தருவித்த
இமைகள் உரசலில்
உவர் நீர்
மொழியாகிறது.

மண்ணைப் புணர்ந்த
நீராய்
மனங்கள் .

(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக நடத்திய படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment