களிமண் பிசைந்து
கண், காது, மூக்கு வைத்து
இலை தழைகளால் அலங்கரித்து
கத்தரித்த காகிதங்களால்
தோரணம் செய்து
கும்மாளமாய் குழந்தைகள் ஆடி
மண் தேரில் சாமி உலா வர
இனிதாய் முடிகிறது
சிறுவர்கள் திருவிழா.
கலவரமாய் முடிகிறது
பெரியவர்களின் திருவிழா.
கண், காது, மூக்கு வைத்து
இலை தழைகளால் அலங்கரித்து
கத்தரித்த காகிதங்களால்
தோரணம் செய்து
கும்மாளமாய் குழந்தைகள் ஆடி
மண் தேரில் சாமி உலா வர
இனிதாய் முடிகிறது
சிறுவர்கள் திருவிழா.
கலவரமாய் முடிகிறது
பெரியவர்களின் திருவிழா.
(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மாவிபக‘வின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)
No comments:
Post a Comment