தேவைகளின் விரட்டலில்
சாசனம் தந்து அடிமையான நான்கில்
பயில்வான் சுழியில்
முதலாவதாய்ச் செத்துப்போன
நான்காவது
அடுத்தடுத்த சுழிகளின் நீரில்
அகப்பட்டு அமிழ்ந்துபோன
இரண்டாவது
சுழிகள் தீண்டா உயரத்தில்
நின்றபோதும் மாண்டுபோன
மூன்றாவது
ஒன்றின்மேலொன்றாய் அடுக்கிய பிணங்கள்மேல்
ஆவிகளின் அழுத்தச் சுமைதாங்கி
முதலாவது
(2012 ஜனவரி 30)
No comments:
Post a Comment