அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக, பிரதமர் மன்மோகன் சிங்கின் 'திரு உருவ' படத்தை எரித்ததாக, CPI (ML) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் உள்ளிட்ட கட்சித் தோழர்கள் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அவனவன் கஞ்சி கேட்டு போராடுனா, அவன தீவிரவாதின்னு கவருமென்ட்டு சொல்லும். அமைதியா ஒக்காந்து உண்ணாவிரதம் பண்ணா, அவன என்ன சொல்லும்? எங்கள மாதிரி அப்பாவி மக்களை காப்பாத்த ஆயுதத்த எடுத்தா, அவன் நக்சலய்ட்டாம்... அவங்களுக்கு எதிரா, கவருமென்ட்டு ராணுவத்த அனுப்பும்.
லோக் பால்ன்னு என்னவோ ஒருத்தன் கேக்குறான், அவன் உண்ணாவிரதம் இருக்கக்கூடாதுன்னு கவருமென்ட்டு போலீச அனுப்புது. ஆயுதமும், உண்ணாவிரதமும் இந்த கவருமென்ட்டுக்கு ஒன்னாத் தெரியுது.
பெரியாசுபத்திரியில நாங்கல்லாம், மருந்தில்லாம சிரமப்படுறோம். மன்னராட்சி நடக்குற நம்ம நாட்டோட மகாராணி, வெளிநாட்டுல போயி ஆபரேசன் பண்ணுறாங்களாம். அந்த மகாராணி இல்லாததால, நம்ம கவருமென்ட்டுல இருக்குறவனுக்கு, உண்ணாவிரதத்த என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கான்... ஒரு வேள மகாராணி கோபத்துக்கு ஆளாயிட்டா...???
அகிம்சை, காந்தி, வந்தே மாதரம் அப்படி இப்படின்னு வாய் கிழிய பேசுன காங்கிரசுக்காரன் எல்லாம், அவன் கட்சிக்கூட்டத்துலையும் அடுத்தவன் வேட்டியக்கிழிச்சுக்கிட்டு அடிச்சு விரட்டுறான், அடுத்தவன் உண்ணாவிரதம் இருந்தாலும், அங்கயும் போய் அடிச்சு விரட்டுறான். இது என்ன அகிம்சையோ, என்ன எழவோ?
கபில் சிபலு, திக்குவிஜய் சிங்கு மாதிரி அரைவேக்காட்டுப் பசங்கள எல்லாம் யாரு அரசவைக் கவிஞர்களா ஆக்குனது? தினம் தினம் சிரிப்புக் காட்டுறானுகளே... பேசாம அரசவை பபூன் ஆக்கி இருக்கலாம்.
ஆட்டயப்போடலாமாம் இந்த நாட்டுல, ஆனா அத யாரும் கேக்கக்கூடாதாம்... அதுக்கு தான் இந்த ஆட்டம் போடுறானுங்க பிக்காளிப்பயலுக... தட்டிக்கேட்டா ஜெயில்ல போடுவான். இத தானே பிரிட்டிசுக்காரன் செஞ்சான். இந்த ரெண்டு நாதாரிகளும் பொறந்த இடம் ஒன்னு தானே...
EVKS இளங்கோவன் அப்பிடின்னு ஒரு அறிஞர் இருக்கார். அவரு சொல்லுறார், "அண்ணா ஹசாரே முதலில் தன்னை ஒரு நேர்மையாளர் என்று நிரூபிக்கட்டும். பிறகு போராட வரட்டும்" அப்டின்னு சொல்லுறார். அதாவது, இந்த திருட்டுப்பயளுகள எதித்து யாரு வரணும்மினு இவனுகளே முடிவு பண்ணுவானுகலாம்.
சரி, இந்த அல்லக்கைகள விடுங்க... நம்ம பிரதமருன்னு ஒருத்தர் இருக்காரே, அவரு என்ன சொல்லுறார் கேப்போமா?
"அதாகப்பட்டது, இந்த மாதிரி உண்ணாவிரதம் இருந்தெல்லாம் இந்த நாட்டுல இருந்து ஊழல ஒழிக்கமுடியாது" அப்டின்னு சொல்லுறார் இந்த நாட்டுக்கு பொறுப்பாளர், அதாங்க பிரதமர். இப்டி சொன்னதுக்கு மகாராணி கிட்ட பெர்மிசன் வாங்கினாரா தெரியல...
ஏய்யா, உலகத்திருடன் எல்லாம் உன் கூட தான் இருக்குறான், அது உனக்குத் தெரியல. அவன் ஆட்டயப்போட்டு மாட்டுனா, "எனக்கு ஏதும் தெரியாது"னு சொல்லுற. அதத்தட்டிக்கேட்டு போராட்டம் நடத்துனா, பெர்மிசன் தரமாட்ட. மீறி பண்ணா போலீச அனுப்புவ. உண்ணாவிரதம் இருந்து ஊழல ஒழிக்கமுடியாதுனு சொல்லுவ.
அய்யா சாமி, நீ இந்த நாட்ட நெசமாத்தான் ஆளுறியா? இல்ல ஆளுற மாதிரி கனவு காணுறியா?
நீ ரிசர்வ் பேங்க் கவர்னர் இல்லைய்யா... இந்த நாட்டோட பிரதமர், அதாவது PRIME MINISTERRRRRRRRRRRRR....
காதுல விழுகுதா இல்லையா? என்ன விழுந்ததோ, என்ன எழவோ போ...
(நன்றி : http://olirumpaadhai.blogspot.com/)
No comments:
Post a Comment