பல குறும், கிளை சாலைகள்
பெரும் பாதையில்
நெடுவழி பயணத்தில் இணைகின்றன.
உதிரிகள் ஒன்று சேர்ந்து
குவிந்து கிடக்கின்றன
குவியலாக.
காய்ந்த வெயிலுக்கு கருகுவதில்லை
பெருத்த மழைக்கு மிதப்பதில்லை
அனல் காற்றுக்கு பறப்பதில்லை.
குவியல்கள்
சிறுசிறு குவியல்களாக
உருமாற்றம் பெறும்.
சந்தைப்படுத்தலின் விதிகளும்
நுணுக்கமும் கற்று
ஏக பெருமூச்சு விட்டு
நடைபோடும்.
எப்போதாவது
208-வது தேசிய நெடுஞ்சாலையில்
நீயும் நானும் செல்வதற்கு வாய்ப்புள்ளது.
அப்போது
நான் சற்று கனத்தோ
நீ சற்று மெலிந்தோ
இருக்கலாம்.
(2011 ஆகஸ்ட் 7ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக‘வின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)
No comments:
Post a Comment