Monday, July 16, 2012

கால்கள் – பா.ராஜேந்திரன்

   த்தனை முறை
எட்டி
உதைத்திருக்கும்
இந்தக் கால்கள்...

வாசலில்
வந்து நிற்கும்
கடன்காரர்களுக்குப்
பயந்து
எங்கெல்லாம்
ஓடி ஒளிந்திருக்கும்
இந்தக் கால்கள்

கூலி
வாங்கிய கையோடு
எத்தனை கடை
தேடி அலைந்திருக்கும்
இந்தக் கால்கள்

பாத யாத்திரை
பயணம் செல்ல
வலி தாங்கிய கால்கள்
பிளையினை
பள்ளிக்கு அழைத்துச் செல்ல
வர மறுத்த கால்கள்...

தீ மிதி திருவிழாவில்
இரையாகிப் போன கால்கள்...

கணவனின் கால்களுக்கு
கடவுள் கொடுத்த
தண்டனையோ...?

அறியாமைத் தீயில்
தெரியாமல் மிதித்த பக்தனுக்கு
சரியான தீர்வோ...

பெண்ணின் மனம்
மென்மையானது
கண்ணில் வடியும்
கண்ணீரே சாட்சியானது...

அன்னையின்
கண்ணீரை
அப்பனின் கால்கள் பற்றிய
கதை தெரிந்த
பிள்ளையின்
கைவிரல்
துடைத்திடும்…
(2012 ஜூலை முதல்நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment