Monday, July 16, 2012

பிழைப்பிற்கான... - ஜெயகணேஷ்

    திருத்தப்படாமலேயே
இருக்கின்றன
நிறைய பிழைகள்

அதிலிருந்து
எதைக்
கற்றுக்கொள்வது

சிவப்பு
திருத்தக் கோடுகள்
படிந்து பழிக்கும் முன்
பலமிழந்து விடுகின்றன
இடப் பக்கங்கள்
பிழைப்(பிற்கான) பாடங்களால்

நகர்தல் திசை
நகங்களின் விசை
புறங்களின் அசை
அகங்களின் ஆசை
ஓங்காரமிட்டு உயர்ந்திடும்
இந்த
பிழையிசையை

எந்தத் திரை
மூடியிருக்கும்
எனக்கான மேடையை

இதயம் விற்று
வயிறு திளைக்கும்
என் பிழைப் பாடல்களை
கூறு கட்டி கூவிட...
எந்தத் திரை
மூடியிருக்கும்
எனக்கான மேடையை...
(2012 ஜூலை முதல்நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment