அண்ட வெளியெங்கும்
படர்ந்திருக்கும் இருளா?
இசையை மொழிபெயர்க்காத
நிசப்தமா?
எழுதப்படாமலிருக்கும்
நாட்குறிப்பின்
வெள்ளைப் பக்கங்களா?
தனிமையைக்
குடி வைத்திருக்கும்
வெற்று அறையா?
வேலையற்ற
பொழுதுகளின் நிகழ்வுகளா?
வார்த்தைகளைப்
பிரசவிக்க முடியாத மௌனமா?
ஆடைகளை அணியாத
நிர்வாணமா?
காலத்தையும் வெளியையும்
அடையாளப்படுத்தும்
‘குவாண்டம்’ சூத்திரப் பூஜ்யமா?
‘இருத்தல்’ இல்லாத
இருத்தல் நிலையா?
தங்களிடம்
சொல்வதற்கும்தான்…
(2011 செப்டம்பர் 04ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் படைப்பரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கவிதை)
No comments:
Post a Comment