முடி திருத்தும் கடையின் வாசலில் முன்னாள் கடைக்குட்டியாகிய நான் நின்றிருந்தேன். “முடி வெட்ட வேண்டுமென்றால் உள்ளே வா” என்றான் கடைக்காரன்.
“இல்லை” என்றேன்
நான்.
“வேறென்ன?”
“ஒரு சந்தேகம்” என்று இழுத்தேன்.
“என்ன?”
”இவ்வளவு தரித்திரத்தை வைத்துக் கொண்டு
ஏன் இன்னும் ஏழையாகவே இருக்கிறீர்கள்?”
“தரித்திரத்தோடு இருப்பதாலேயல்லவா
ஏழையாய் இருக்கிறேன்?”
“இங்கெல்லாம் தரித்திரத்துக்கு மதிப்பில்லையா?”
“தரித்திரத்துக்கு மதிப்பா?
பேசாமல் போய்விடு” என்று கத்திவிட்டு ’நாட்டில் குடிகாரர்கள் தொல்லை தாங்க முடியவில்லை’ என்று
முனங்கிக் கொண்டான்.
ஒரு மாதம் கழிந்திருந்தாலும் இப்போதும் என்னைப்
பார்த்தால் முறைப்பான். அதனாலேயே எனக்கிருந்த இன்னொரு
சந்தேகத்தை தற்காலிகமாக கேட்காமலிருக்கிறேன்.
என் கதையை என்னவென்று சொல்வது. விடுதலை என்பது என் வாழ்வில் அடுத்த துன்பத்துக்கான இடைவெளி என்றே ஆகிவிட்டது.
வெறுப்புணர்வு மேலிட எருமை ரோமங்களாலான கூரை வீட்டிலிருந்து தப்புவதென்று
முடிவெடுத்தேன். எங்கே போவது? ஒன்றும் புலப்படவில்லை.
கூரை வீடுகள் சலிப்பை ஏற்படுத்தி விட்டன. எங்கே போனாலும் விதிகளை மாற்றிவிட்டு ’நீ தான் கடைக்குட்டி,
சொல்வதைக் கேள்’ என அதட்டுகிறார்கள். அந்தக் கிழவியின் தொல்லையோடு உளவாளிகளின் இம்சை வேறு. கடைக்குப் போனால் உளவாளி தண்டனை கொடுப்பான்; போகவில்லையென்றால்
கிழவி மயிலிறகை வைத்து அடித்து நொறுக்குவாள். தீவிர யோசனைக்குப்
பிறகு ஒரு முடிவுக்கு வந்தேன்.
ஆளரவமற்ற இருள் சூழ்ந்த நண்பகலில் தப்பி ஓடினேன். யதார்த்த உலகம் குறித்து தங்கக் கூரை வீட்டிலிருந்த சமயத்தில் கிழவர் நிறைய
சொல்லியிருக்கிறார். இங்கு வந்து வேலை தேடிக் கொள்வதே ஒரே தீர்வு என்று எண்ணலானேன். ஆனால் அது எவ்வளவு பெரிய மூடத்தனமென்பதை வந்த
இரண்டாம் நாளேயல்லவா உணர்ந்து கொண்டேன்!
வழியில் கடைக்குச் செல்ல வேண்டியிருக்கலாம் என்பதால்
முன்னெச்சரிக்கையாக கையில் கொஞ்சம் தரித்திரம் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். குட்டையைக்
கடந்தால் யதார்த்த உலகத்தை அடைந்துவிடலாம். ஆனால்
எனது உருவம் அவ்வளவு பெரியதாக இல்லை என்பதால் அங்கிருந்த எறும்பின் உதவியை நாடினேன்.
இப்படியாக எறும்பின் முதுகில் ஏறிக்கொண்டு என் பயணத்தைத் தொடர்ந்தேன்.
பத்தே நிமிடத்தில் என்னை கரை சேர்த்த்து எறும்பு.
வந்த சேர்ந்த உடனேயே பேரதிர்ச்சி காத்திருந்த்து. குட்டையைப்
பார்த்தேன். அது கடலாக மாறி விட்டிருந்தது. எனக்கு உதவிய எறும்பு சிரஞ்சீவியாவதில்
உடன்பாடு இல்லை என்பதால் அக்கரை செல்ல வேண்டாமென அதைத் தடுத்து விட்டேன். மத்தியானத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. தரித்திரம் கொடுத்து சாப்பாடு கேட்டால் அடிக்க
வருகிறார்கள். மட்டுமல்லாமல் தரித்திரக் குவியலில் வாழ்பவனுக்குக் கூட அதன் அருமை தெரியவில்லை.
இங்கே யாரிடம் என்ன வேலை கேட்பது என்றும் விளங்கவில்லை.
இங்கே கூரை வீடுகளையே பார்க்க
முடியவில்லை. இவர்களது மாடி வீடுகள் எனக்கு வினோதமாக இருந்தன.
ஆனால் அன்றே ஒருவன் எனக்கு வேலை தருவதாக வாக்குறுதி
கூறி மறுநாள் அதிகாலை வருமாறு கூறினான். அன்றிரவு நடைபாதையில்
(மக்கள் நடுத்தெருவில் நடக்காமல் இதில் தான் நடந்து செல்கிறார்கள்)
தூங்கினேன்.
மறுநாள் காலை அவனிடம் சென்றேன். அந்தப் பகுதியிலிருக்கும் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்வதுதான் வேலை.
பால்பாக்கெட்டுகளையும் மிதிவண்டியையும் கொடுத்துவிட்டு வீடுகளின் விலாசங்களையும்
எழுதிக் கொடுத்தான்.
ஒருமணி நேரம் கழிந்திருக்கும். ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பிலிருந்து மிதிவண்டியை நோக்கி வந்து கொண்டிருந்தேன்.
பால் பாக்கெட்டுகளை வைத்திருந்த பை வெறுமையாக இருப்பது சில அடி தூரத்திலேயே
புலப்பட்டது. சோர்வுற்று மரத்தடியில் சாய்ந்து கொண்டேன். இவ்வுலகில் தேவையற்ற
ஒருவனாய் வந்து சேர்ந்த என்னைப் போல அந்தக் கட்டிடத்தின் முன் தேவையில்லாத ஒற்றை மரம்.
எப்படியும் ஐந்து அல்லது ஆறு பாக்கெட்டுகள் இருக்கும். முதலாளிக்கு என்ன பதில் சொல்வது
எனத் தெரியவில்லை.
என் மீது விழுந்த துளிகளை தொட்டுப் பார்த்தேன்.
அது பால் தான் என்று தெரிந்தது. மரத்தை நிமிர்ந்து பார்த்து அதிர்ந்து போனேன். ஒரு
குரங்கு எந்தக் கவலையும் இல்லாமல் ரசனையோடு சுவைத்துக் குடித்துக் கொண்டிருந்தது.
“குடியிருப்புக்குள் குரங்கா? நல்ல கதை. இதோ பார்.
ஏற்கனவே காது குத்திவிட்ட காரணத்தினால்தான் கடுக்கன் அணிந்திருக்கிறேன். உன்னை இன்னொரு
முறை நான் பார்த்தால் என்ன செய்வேன் என எனக்கே தெரியாது” என்று கத்தினான்.
ஆதரவளிக்க எவரும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
இவ்வளவு பெரிய இடத்தில் என் மீது பரிவு காட்ட ஒருவரும் இல்லை என நொந்து போனேன். அந்தச்
சமயத்தில் தான் இட்லிக் கடையில் வேலை கிடைத்தது. . கடைக்காரன் தயவில் அவன் வீட்டிலேயே
தங்கிக் கொண்டேன். அவனும் அனாதை தான்.
நாட்கள் உருண்டோடின. எல்லாம் சகஜமாக இருப்பதாகவே
தோன்றியது. இவ்வுலக இயல்புகளை முதலாளி மூலமே தெரிந்து கொண்டேன். அதற்கேற்றார் போல்
என்னை தகவமைக்கும் முயற்சியிலிருந்தேன். ஆனால் வாழ்க்கை விடுவதாக இல்லை. நேற்று நடந்த
சம்பவம் என் அமைதியை மீண்டும் குலைத்து விட்டது.
இரவு சாப்பிட்டுவிட்டு கை கழுவி வருவதற்காக உள்ளே
சென்றேன். வந்து பார்த்தால்…… நடு வீட்டில் பசு மாடு பரோட்டா தின்று கொண்டிருக்கிறது.
அதை விரட்டி விட்டாலும் வாயில் பரோட்டாவை கவ்விக் கொண்டு சென்று விட்டது. கடை சென்று
திரும்பிய முதலாளி உணவு பரிமாறுமாறு கூறினான்.
“மன்னித்துக் கொள்ளுங்கள். ரொம்பப் பசி. நானே தின்று
விட்டேன்” என்றேன்.
”சரி பரவாயில்லை” என்று சொல்லிவிட்டு வீட்டிலிருந்த
முட்டையை உடைத்துக் குடித்துவிட்டு தூங்கிப் போனான்.
என் அதிர்ஷ்டம் என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது.
படகு வலித்துக் கொண்டு போனால் கடல் குட்டையாகியதும் அது மூழ்கிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.
எப்படிக் கடப்பேன்?
(ஹரி ராஜா’வின்
கூரை வீடுகளின் தொடர்ச்சியாகக் கட்டப்பட்டவை இந்த மாடி வீடுகள். கூரை வீட்டை மீண்டும்
ஒருமுறை பார்க்க நீங்கள் கீழுள்ள இணைப்பின் வழிவாயக நுழையுங்கள்.)
விடுதலை என்பது என் வாழ்வில் அடுத்த துன்பத்துக்கான இடைவெளி என்றே ஆகிவிட்டது - தொடர் வாசிப்பை நிச்சயப்படுத்துகிறது. வாழ்க்கை பற்றிய பயமா அல்லது எதார்தத்தையை மீறிய தயிரியமாகவும் புரிந்து கொள்கிறேன். முன்னுக்கு பின் முரணானான வாக்கியங்களில், நானும் முன்னும் பின்னும் படித்து மகிழ்கிறேன். உண்மைதான், சமூக உறவில் இருந்து அனைத்தும் அறுந்து போகிறது. அதிர்ஷ்டமும், கர்மமும் தான் சாதாரண மனிதனை, தனி மனிதனை தன்னுடைய நிலைக்கு தான் மட்டுமே காரணம் என எண்ணூமளவு வைத்திருக்கிறது. எழுத்துகள் மிகவும் அருமையாக இருக்கிறது. படகு தான் வலித்துக் கொண்டு போனாலும், கடல் குட்டையானதும் மூழ்கிவிடுமோ என பயமாக இருக்கிறது. உங்களுடைய அடுத்த பதிவை எதிர் நோக்கி...
ReplyDeleteIt's really a cool and helpful piece of info. I'm happy
ReplyDeletethat you simply shared this helpful info with us. Please stay us up to date like this.
Thanks for sharing.
Take a look at my page clash of clans hack
Article writing is also a fun, if you know after that you can write or else it is
ReplyDeletecomplicated to write.
my web-site - Carly Brooke Avraham Drugs Addicted