2015 செப்டம்பர் 19ஆம் நாள் மாலை 6 மணி அளவில் அருப்புக்கோட்டை மதிஇல்லத்தில்
படைப்பரங்கமும் கலந்துரையாடலும் நடைபெற்றன.
படைப்பரங்கினை தோழர் மாணிக்
ஒருங்கிணைத்தார்.
கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி
‘அவள்ன்களின் ஊதிப்பெருக்கம்’ என்ற சிறுகதையையும்
மாணிக் ‘பாணிபூரி சாப்பிட்ட
பாம்பு’ என்ற குழந்தைகளுக்கான சிறுகதையையும்
ராஜேஸ் கண்ணா எழுதிக் கொண்டிருக்கும்
நாவலின் இரண்டு அத்தியாயங்களையும்
பாண்டூ கவிதை ஒன்றும் வாசித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற ‘மதமும்
கடவுளும்’ கலந்துரையாடலை தோழர் வருண் முறையான தொடக்கவுரையுடன் ஒருங்கிணைத்தார்.
கலந்துரையாடலின் முதல் கட்டுரையாக ‘வரலாற்றியல் நோக்கில் பொதுப்புத்தியில்
பதிந்த மதம் மற்றும் இறைகள்’ ஐ முன்வைத்தார்.
காத்திரமான கட்டுரை மீதான
நேர் எதிர் விவாதங்கள் கலந்துரையாடலில் வெளிப்பட்டன. இந்த ஒற்றைக் கட்டுரை மட்டும்
அதன் மீதான விவாதம் சுமார் இரண்டு மணி நேரம் தொடர்ந்தது. ‘மதமும் கடவுளும்’ பிற கட்டுரைகள்
எதிர்வரும் சனிக்கிழமை (26-09-2015) மாலை 6 மணிக்கு மதி இல்லத்தில் தொடரவுள்ளன.
No comments:
Post a Comment