Sunday, August 15, 2021

கதவு 28 இணைப்புகள்



தலையங்கம்

மக்கள் விரோதச் செயல்பாடுகளுக்கெதிராகப் போராடவும் அணிதிரளவும் கருத்துகளை வெளிப்படுத்தவும் சிந்திக்கவும்கூடச் சுதந்திரமற்ற சூழ்நிலை இன்றளவும் நிலவுகிறதென்பதை நம்மால் மறுக்க முடியவில்லை. அடக்குதலையும் ஒடுக்குதலையும் எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமற்று மனிதாபிமானமற்ற முறையில் நடைமுறைப்படுத்துவோர் இல்லா நிலையே விடுதலைக்கான அடையாளம்.

https://ekathavu.com/2021/08/editorial_28/


எப்போதெல்லாம் மனம் சோர்வடைந்து, தோல்விகளால் துவண்டு, சமூக நெருக்கடிகளுக்குள்ளாகி ஒடுங்கிப்போகிறோமோ, எப்போதெல்லாம் நம் வாழ்வு முடிந்ததென்று அஞ்சி நடுநடுங்கி நெருப்புக்கோழிகளைப்போல் நம் தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொள்கிறோமோ, அப்போதெல்லாம் ஸ்பார்டகஸ் நம் காதில் நம்பிக்கை ஊற்றெடுக்கும்படி கிசுகிசுக்கிறான்.

“There Is Always A Choice.”

“There Is Always A Choice.”

“There Is Always A Choice.”

https://ekathavu.com/2021/08/sathya_2_28/


பிரெட் சிறை செல்வதை FBI விரும்பவில்லை. சிறை பிரெட்டை இன்னும் பிரபலமாக்கும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறது. அதனால் அவனை கொலை செய்ய முடிவு செய்கிறது. வில்லியம் மூலமாக அவனுக்கு தூக்க மருந்து கொடுத்துவிட்டு தோழர்களுடன் தூங்கும் அவனை சுற்றி வளைத்து சரமாரியாக சுடுகிறது. பிளாக் பேந்தர் தரப்பில் ஒரு தோட்டா சுடப்படுகிறது. FBI தரப்பில் தொண்ணூற்று ஒன்பது தோட்டாக்கள் சுடப்படுகின்றன. அங்கு நடந்ததை ‘துப்பாக்கி சண்டை’ என்று FBI சொல்கிறது.

https://ekathavu.com/2021/08/sathya/


இத்தொகுப்பில் இடம்பெறும் தனிநபர்களின் அனுபவங்கள் நிச்சயம் தனிப்பட்டவை அல்ல. அவர்களைப்போல் பாடுபடும் அனைவரின் வாழ்க்கைநிலையே கதைகளாய் இந்நூலில் நிறைந்துள்ளது. துயரச் சுவை மிகுந்துள்ள தொகுப்பில் சற்றே மாறுதலாய் ஓரிரு கதைகளும் அமைந்துள்ளன… எள்ளலாய் சிற்சில வார்த்தைகளும் ஓரிரு வரிகளும் ஆங்காங்கு தென்படுகின்றன. ஒரு மழை நாளில் கவனத்தை ஈர்க்கும்; வாசித்தால் மனது கனக்கும்.

https://ekathavu.com/2021/08/vijayakumar_28/



சிவப்பு கிளவுஸுடன் தோளில் பாயும் புலி படம் பச்சை குத்தியிருக்கும் வேம்புலியை அதே போல் சிவப்பு கொடியில் பாயும் புலி படத்துடன் வலம்வரும் முக்குலத்தவர்களின் குறியீடாக கொள்ள முடிகிறது. திமுக குறியீட்டுடன் வந்து கடைசியில் கருப்பு பார்டருள்ள நீல அங்கியுடன், “நீதான் நம்ம மக்களுக்காக ஜெயிக்கணும்,” என்றெல்லாம் வசனத்துடன் கிளம்புவது, டான்சிங் ரோஸின் கருப்பு வெள்ளை சிவப்பு நிற ஷார்ட்ஸ் என எல்லாவற்றிலும் கவனம் செலுத்திய ரஞ்சித் கொஞ்சம் திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

https://ekathavu.com/2021/08/kaalan_28/


காரெழில் ஈங்கவனின் நவீன சிறுகதை ‘கூற்று’

https://ekathavu.com/2021/08/karazhil-eengavan/


சிதம்பரம் ரவிச்சந்திரனின் மொழிபெயர்ப்புச் சிறுகதை...

https://ekathavu.com/2021/08/chidambaram-ravichendren_28/


கதவில் வீசிக் கொண்டிருக்கும்

கவிஞர் சமயவேலின்

கண்மாய்க்கரை காற்று

https://ekathavu.com/2021/08/samayavel_5_28/


கதவு 28ல் செவல்குளம் செல்வராசின் கவிதைகள்

https://ekathavu.com/2021/08/sevelkulam-selvarasu/


கதவு 28ல் அர்ஜூன் ராச்’சின் கவிதைகள்

https://ekathavu.com/2021/08/arjunraj_28/


கதவு 28ல் பூவன்னா சந்திரசேகரின் கவிதைகள்

https://ekathavu.com/2021/08/poovanna-chendrasekar_28/


கதவு 28ல் சிலம்பரசன் சின்னக்கருப்பனின் கவிதைகள்

https://ekathavu.com/2021/08/silambarasan-chinnakaruppan_28/


கதவு 28ல் சிபி சரவணனின் கவிதைகள்

https://ekathavu.com/2021/08/sibi-saravanan_28/


கதவு 28ல் தமிழ் மணியின் கவிதைகள்

https://ekathavu.com/2021/08/tamilmani_28/ 


கதவு 28ல் வசந்ததீபனின் ‘சித்திரவதை முகாமிலிருந்து தப்பிப்பதல்ல… நிர்மூமாக்குவதே விடுதலை’ கவிதை

https://ekathavu.com/2021/08/vasantha-dheepan_28/


கதவு 28ல் சி.பிருந்தாவின் ‘விதியின் வழி’ கவிதை

https://ekathavu.com/2021/08/c_brindha_28/

Friday, July 16, 2021

கதவு 27


 எழுத்தாளர்கள் சத்யா, மும்பை புதிய மாதவி, காரெழில் ஈங்கவன்,

சத்யா மருதாணி, சிதம்பரம் ரவிச்சந்திரன், புலியூர் முருகேசன்,

சமயவேல், செவல்குளம் செல்வராசு, அட்சயா, மதிகண்ணன்,

சங்கரன், செல்வசங்கரன், அர்ஜூன் ராச், அருண், சிபி கரவணன்

ஆகியோரின் படைப்புகளுடன்

கண்ணன், ஜென்னிமாவின் படங்களுடன் - கதவு 27.

எதிர்வரும் இதழ்களில் உங்களின் பங்களிப்பும் இருக்கட்டும்

https://ekathavu.com/

Monday, June 14, 2021

கதவு இதழ் எண் 26

எழுத்தாளர்கள் 
சத்யா சிதம்பரம் ரவிச்சந்திரன்

தமிழ்மணி நாஞ்சில் எழுத்தாணி

மதிகண்ணன் சமயவேல்

செவல்குளம் செல்வராசு இளங்கோவன் பெருமாள்

மதுரா பூவன்னா சந்திரசேகர்

அழகுபாண்டி அரசப்பன் க.புனிதன்

ஆகியோரின் பங்களிப்புடன்

கதவு இதழ் எண் 26

Monday, April 19, 2021

கதவு இதழ் எண் 24 (ekathavu.com) ஏப்ரல் 2021

சத்யா, சிதம்பரம் ரவிச்சந்திரன்,       கண்ணுக்கினியாள்

காரெழில் ஈங்கவன், மதிகண்ணன், நவகிரிதர் ராம்சேட்

வசந்ததீபன், சமயவேல், அர்ஜூன்ராச்

சிலம்பரசன் சின்னக்கருப்பன்

ஆகியோரின் பங்களிப்புடன்

கதவு இதழ் எண் 24

Monday, March 22, 2021

கதவு இதழ் எண் 23 (ekathavu.com) மார்ச் 2021

 கதவு இதழ் எண் 23 - மார்ச் 2021 ekathavu.com

இந்த இதழில் 

                               மதிகண்ணன், சத்யா, சிதம்பரம் ரவிச்சந்திரன்

                               கா.சி.தமிழ்க்குமரன், சமயவேல், ஆதிரன்

                               பூவன்னா சந்திரசேகர், சிபி சரவணன்

ஆகியோர் பங்களித்துள்ளனர். வரும் இதழ்களில் உங்களின் பங்களிப்பம் இருக்கும் என நம்புகிறோம்.

படைப்புகளை உள்வாங்கும் மின்னஞ்சல் editorkathavu@gmail.com



Friday, January 1, 2021

கதவு மின்னிதழ் - தை முதல் நாளில் - ekathavu.com


அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

2021 பொங்கல் நாளில் (ஜனவரி 14ல்) ekathavu.com என்ற வலைத்தள முகவரியில் கதவு மின்னிதழ் வலையேறவிருக்கிறது.

அச்சிதழ் கண்ட தடைகளைக் கடக்க மின்னிதழ் செயல்பாடு வாய்ப்பாக அமையும்.

கதவு மின்னிதழ்

ஆசிரியர்                            : தோழர் மதிகண்ணன்

நிர்வாக ஆசிரியர்கள்  : தோழர்கள் சத்யா, இவான் சங்கர்

ஆசிரியர் குழு                  : தோழர்கள் கேகே, விஜி, ரமேஷ்

தங்களையும் இந்தக் குழுவில் இணைத்துக் கொள்ள விருப்பமிருப்பவர்கள் editorkathavu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

இது நமக்கான இதழ்…

தோழர்களும் நண்பர்களும்

எழுதவும் – எழுதவைக்கவும்

படிக்கவும் – வளர்க்கவும்

பரப்பவும் உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்.

என்றென்றும் அன்பு

மதிகண்ணன்

ஆசிரியர் – கதவு மின்னிதழ் ஆசிரியர் குழுவிற்காக

+91 9443184050

editorkathavu@gmail.com

ekathavu.com/ 

Tuesday, December 29, 2020

மீண்டும் கதவு - மின்னிதழாக...

               ஒவ்வொருவருக்கும் தான் செய்ய விரும்பும் ஏதோ ஒன்றைப் பற்றிய ஒரு எண்ணம் இருக்கும். கற்பனையினால் மெருகேற்றப்பட்ட இந்த எண்ணத்திற்கும், இறுதியாக அவர் சாதித்துப் பெற்ற வடிவத்திற்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருக்கும். இந்த இடைவெளியைக் குறைப்பதற்குத்தான் மீண்டும் மீண்டும் முயல வேண்டியிருக்கிறது - லூயி மால்

அன்பு நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் வணக்கம்

1998 மார்ச் தொடங்கி 2012 இறுதிவரை வெளிவந்த ‘கதவு’ இதழ் மீண்டும் மின்னிதழாக ‘மாவிபக’ தோழர்களின் முயற்சியால் 2021 ஜனவரி முதல் தொடங்கப்படவிருக்கிறது. பொங்கல் நாளில் வலையேறவிருக்கிறது.

தங்கள் படைப்புகள் மற்றும் எழுத்துகள் வழியாக நீங்களும் எங்களின் பயணத்தில் இணைய வேண்டுமாய் அழைக்கின்றோம்.

படைப்புகளை pdf ஆகவோ image ஆகவோ அனுப்ப வேண்டாம்.

என்றென்றும் அன்பு

மதிகண்ணன்

ஆசிரியர் – கதவு’க்காக

+91 9443184050

editorkathavu@gmail.com

Thursday, December 24, 2020

இனிய பண்பாளர் தொ.ப இன்னுயிர் நீத்தார்.


தமிழினத்தின் பண்பாடு தொடர்பான வரலாற்று ரீதியான தரவுகளை அறிவுத் தளத்திலும் உணர்வுத் தளத்திலும் அனைவருக்கும் கற்பித்த இனிய பண்பாளர் தொ.பா என்று அன்புடன் அழைக்கப் பெற்ற பேராசிரியர் தொ.பரமசிவம் இனி மனித உடலுடன் நம்முடன் இல்லை.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தார், நண்பர்கள், மாணவர்களுடன் கல்விப் புலத்திற்கு வெளியில் அவரிடம் கற்ற மாவிபக’வும் ஆழ்ந்த வருத்தத்தைத் பதிவு செய்கிறது.

அவரது உரைகளின் வழியாகவும் எழுத்துகள் வழியாகவும் நாம் தொடர்ந்து பண்பாட்டு அசைவுகளின் தாக்கத்தை உணர்ந்து செயல்படுத்துவதே நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும்.