http://maanudaviduthalai.blogspot.com/
மின்னஞ்சல்: maveepaka@gmail.com
செல்லடப்பேசி: 94431 84050
மானுட விடுதலை
பண்பாட்டுக் கழகத்தின் (மாவிபக) வாழ்த்துகளும் வணக்கங்களும்
கு.பா.நினைவு
சிறுகதைத் தொகுப்புகள், சுப்புராயுலு நினைவு கவிதைத் தொகுப்புகள் என இரண்டிற்குமான விருதுகள்
- 2020 மார்ச் முதல்
நாளில் அருப்புக்கோட்டை நீதிமனறம் அருகில் உள்ள இயற்கை அரங்கில் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்வின் பகுதிகளாக ஓர் இலக்கியக் கருத்தரங்கமும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியும் நடைபெற உள்ளன.
விருதுபெறும் எழுத்தாளர்கள் மட்டுமன்றி பல்வேறு எழுத்தாளர்களும் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் நடைபெற உள்ள கவிதைப் போட்டியில் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு தங்களின் படைப்புத் திறனை வெளிப்படுத்தலாம்.
கவிதைகள் கீழ்கண்ட
தலைப்புகளில் இருக்க வேண்டும்.
ü
செதுக்கும் நிழலுருக்கள்
ü
விரலிடுக்கில் தப்பிய புகை
ü
தப்புகளும் தப்பித்தலும்
ü
தத்துவத்தின் வறுமை
ü
நிறம் மாறும் நிறங்கள்
ü
பிணம் தின்னும் சாஸ்திரங்கள்
ü
மின்னல் பொழுதே தூரம்
ü
மண்ணுக்குள்ளே சில மாந்தர்
ü
தத்தரிகட தத்தரிகிட தித்தோம்
ü
சிதைவுகளின் ஒழுங்கமைவு
Ø
கவிதைகள் எந்த வகையினதாகவும் (மரபுக் கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை) இருக்கலாம்.
Ø
கவிதைகள் மாணவர்களின் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும்.
Ø
கவிதையின் ஒரு பிரதியை மேடையேறும் நேரத்தில் நடுவர் குழுவிடம் கொடுத்துவிட்டு மேடையில் தங்கள் கவிதையை வாசிக்க வேண்டும்.
Ø
கவிதை வாசிப்பதற்கான
நேரம் மூன்று மணித்துளிகள் (நிமிடங்கள்) மட்டுமே.
Ø
கவிதை வாசிக்கும் மாணவர்கள் கட்டாயமாக கல்லூரியின் அடையாள அட்டையுடன் வரவேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் கல்லூரி முதல்வர் அல்லது துறைத்தலைவரால் ஒப்பமிடப்பட்ட புகைப்படச் சான்றுடன் வரவேண்டும்.
Ø
கவிதைப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் 94431 84050 என்ற செல்லிடப்பேசி எண்ணில் குறுந்தகவல், வாட்ஸ்அப் அல்லது குரல்வழித் தொடர்பில் பதிவு செய்து கொள்வது நல்லது. இயலாதவர்கள் நிகழ்வு நாளில் காலை 9.30 மணிக்கு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள். (ஒருங்கிணைக்க ஏதுவாக இருக்கும்)
Ø
போட்டி தொடர்பாக ஐயங்கள் தீர்க்கவோ மேலதிக விபரம் பெற்றுக் கொள்ளவோ தொடர்பு கொள்வதில் எந்தத் தயக்கமும் தேவையில்லை.
Ø
மூன்று பரிசுகள் அளிக்கப்படும்.
Ø
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஊக்கப் பரிசும் சான்றிதழும் உண்டு.
Ø
நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
வாழ்த்துகளுடன் மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
No comments:
Post a Comment