விருதுகள் 2019 - மாவிபக செயற்குழு
2020 ஜனவரி 16ஆம் நாள் மானுட
விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் செயற்குழு நடைபெற்றது. நடுவர்குழு 2019 விருதுகளுக்கான
தொகுப்புகளைத் தேர்வு செய்து, தேர்வுக்கான விளக்கங்களுடன் சமர்ப்பித்தது.
ü தோழர் சுப்புராயுலு நினைவு விருதிற்கான தேர்விற்காக 16 கவிதைத்
தொகுப்புகள் இணைந்திருந்தன.
ü தோழர் கு.பா. நினைவு விருதிற்கான தேர்விற்காக 28 சிறுகதைத் தொகுப்புகள்
இணைந்திருந்தன.
ü இந்த எண்ணிக்கையை ஆரோக்கியமான ஒன்றாகவே உணர்கிறோம்.
ü மூவரை மட்டும் தேர்வு செய்வது, அதையும் வரிசைப்படுத்துவது என்பது
நடுவர் குழுவிற்கு சவாலான ஒன்றாகவே இருந்திருக்கிறது.
ü படைப்பாளிகளை நீக்கி படைப்பை மட்டும் அணுகுவது என்கிற முறையில்
தேர்வு நடைபெற்றது.
ü விருதுக்காகத் தேர்வு செய்யப்படாத நூல்களில் பலவும் சிறந்த நூல்களாகவே
இருந்தன.
ü எங்களுக்கு வந்த நூல்களில் தேர்வு வரிசையில் பின்தங்கி இருந்தாலும்
அவற்றில் பலவும் பல்வேறு விருதுகள் பெறத் தகுதியானவையே.
ü படைப்பாளிகளை நீக்கிப் படைப்புகளை அணுகியபோதும் படைப்பாளிகளையும்
கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையிருப்பதை நடுவர்குழு உணர்ந்தபோது, கவிதைத் தொகுப்புகளில்
ஒன்றும் சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்றும் என இரண்டு நூல்கள் ஊக்கவிருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இறுதியில்
தோழர் கு.பா. நினைவு விருதுகளுக்காக
1.
அண்டனூர் சுராவின் ‘பிராண நிறக் கனவு’
2.
புதியமாதவியின் ‘ரசூலின் மனைவியாகிய நான்’
3.
க.மூர்த்தியின் ‘கள்ளிமடையான்’
ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும்
ஊக்க விருதிற்காக மதிவாணனின்
‘அவஸ்தை’ சிறுகதைத் தொகுப்பும் தேர்வு செய்யப்பட்டன.
தோழர் சுப்புராயுலு நினைவு விருதுகளுக்காக
1.
ஷக்தியின் ‘அபோர்ஷனில் நழுவிய காரிகை’
2.
ஸ்டாலின் சரவணனின் ‘ரொட்டிகளை விளைவிப்பவன்’
3.
முத்துராசா குமாரின் ‘பிடிமண்’
ஆகிய கவிதைத் தொகுப்புகளும்
ஊக்க விருதிற்காக யாழினிஸ்ரீயின் ‘மரப்பாச்சியின் கனவுகள்’ கவிதைத் தொகுப்பும் தேர்வு செய்யப்பட்டன.
No comments:
Post a Comment