தோழமைக்கு அன்புடன் அஷ்ரஃதீன்
என்ன, எப்படி, ஏன், எங்கு, ஏதற்கு, எப்போது என்ற
கேள்விகளின் விடைகள் மற்றும் விடைகள் மீதான கேள்விகள் நிலை மாற்றம் நடைபெற வழி செய்தது,
பாவம் புண்ணியம்
எல்லா செயல்களுமே (கெலை
உட்பட) ஒருபுறம் பாவத்தில் சாரும் மறுபுறம் புண்னியம் சாரும்,
பொதுவாக எற்றுகொல்லப்பட்ட
ஒரு விசயம் “நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்லை”, அப்ப ஐந்தாவது நபர்
எப்படி போனாலும் பரவாயில்லைனுதான் அர்தம்,
சிறிய குழுக்களாக வாழ்ந்த
காலம் தொட்டு வேட்டை, கவர்தல் யாவும் குழு நலம் வேண்டி பிறரை / பிற குழுக்களை இடர்
செய்தே வந்தன,
மனிதன் வாழ பிற குழு,
கூட்டங்களை மட்டுமல்லாது இயற்கை சமநிலையையும் சீர் கெடுத்து வந்துள்ளான்,
மண்டை சிதைக்கப்பட்ட நிலையில்
மட்டுமே கண்டு எடுக்கப்பட்ட நிறைய கோமோ செப்பியன் எலும்பு கூடுகளும், வரைபடங்களில்
மட்டுமே காணமுடிகின்ற உயிரினங்களும், நீர் ஆதாரங்களும் இதற்கு சாட்சிகள்.
இதே மனோநிலைதான் இன்று
வலம் வருகிறது.
குழந்தை பருவம் முதல்
இளம் பருவம் வரையிலான கற்றல் ஒருவனை செம்மை செய்கிறது,
இதனை மனித மற்றும் இந்த
பூமியின் நன்மைக்கான கூறுகள் நிறைந்து இருந்தன, மாற்றமும் கண்டது,
ஆனால் தான் சேமிக்கும்
/ அபகரிக்கும் செல்ல்வங்களை பெருக்குவதற்குமான வேலை துவங்கப்பட்டது முதல் இந்த பாவ
புண்னிய எல்லைகள் மறு வரையறை செய்யப்பட்டு செயல்பட துவங்கி உள்ளது.
விவசாயம் அழிந்தாலும்
பரவாயில்லை எங்க மொதலாளி 1000 பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறார், எவன் செத்தாலும்
பரவயில்லை என் கட்சிக்கு நன்கொடை கொடுத்த வள்ளல், இது போன்றவர்கள்தான் இன்று king makerஆக வலம் வருகின்றனர்.
தினசரி சோற்றுக்கு ஓடும்
நபர்கள் தங்கள் பாவ புண்ணிய எல்லைகள் மற்றவர்களை இடர்வது இல்லை. இருக்கும் நிலையில்
இருந்து (middle class, upper class,
including sub classes) உயர் நிலைக்கு போக தன் 24 மணி தவிர்த்து பிறரின் nx மணி நேரத்தையும் எடுத்து கொள்கிறான், மேற்சொன்ன
king maker களை பின்பற்றி.
அடிப்படை கல்வி முதல்
கற்றல் திட்ட ஒழுக்கத்தை மாற்றம் செய்யும் போதுதான் இந்த பாவ புண்ணியங்களுக்கு இடையேயான
வித்தியாசம் முறையாக பயிற்றுவிக்கப்படும்,
மேலும் மனித, பூமி சமநிலை
வளம் பெரும்
தோழமையுடன்
அஷ்ரஃப்தீன்
No comments:
Post a Comment