அன்றைக்கு சல்மான் ருஷ்டி… அப்புறம்
தஸ்லிமா…
தொடர்ந்து எம்.எஃப்.ஹூசைன்… இப்போது
பெருமாள் முருகன்…
இவர்களுக்கு முன்னரும் இடையிலும் பட்டியலிட இயலா எண்ணிக்கையில் பற்பல
படைப்பாளிகள். இவர்தான் கடைசி என யாரையும் அறுதியிட்டுச் சொல்ல இயலாது.
இப்படி கண்டிக்கவும் தண்டிக்கவும் எது இவர்களை வழிநடத்துகிறது?
இவர்கள் விரிக்கின்ற கொடுஞ்சிறகுகள் வழியாக எதனைப் பறக்க வைக்க முயல்கிறார்கள்?
தேசிய அடையாளங்கள் என அறிவிக்கப்பட்ட
கொடி, கீதம், பாடல் போன்ற பொருட்களை அவமானப்படுத்துவதும், பறவை, விலங்கு எனப் பகுத்தறிவற்ற
உயிர்களுக்கு ஊறு விளைவிப்பதுமே தேசத்துரோகக் குற்றம் என்றிருக்கின்ற ஒரு தேசத்தில்,
தேசப் பிதா என அடையாளம் காட்டப்பட்ட, இந்திய விடுதலையை ஒருங்கிணைத்த ஒரு உன்னத மனிதரைக்
கொலை செய்தவருக்கு இந்தியா முழுவதும் கோயில் கட்டுவதே இன்றைய அவசரத் தேவை என அறிவித்து
அதனைச் செயல்படுத்துவதன் மூலம் இவர்கள் எதனை நிறுவத் துடிக்கிறார்களோ அதைத்தான் படைப்பாளிகளைக்
கண்டிப்பதன் வழியாகவும் தண்டிப்பதன் வழியாகவும் இவர்கள் அடையத் துடிக்கிறார்கள்.
இப்படியான சூழலில் அடிப்படைவாதத்திற்கு
எதிராக நாம் நிற்கவேண்டியது அவசியமாகிறது. படைப்புச் சுதந்திரத்திற்கும் ஆக்கப்பூர்வமான
விமர்சன சுதந்திரத்திற்கும் ஆதரவான அனைவரும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை நமக்கு
உணர்த்தியிருக்கிறார்கள்.
ஒன்றிணைவோம்.
முதலில் இவர்கள் கத்தோலிக்கர்களைத் தேடி வந்தார்கள்
நான் பேசாமலிருந்தேன் - ஏனெனில்
நான் கத்தோலிக்கனில்லை.
அடுத்ததாக இவர்கள் ப்ராடஸ்ட்டண்டுகளைத் தேடி வந்தார்கள்
நான் அமைதி காத்தேன் – ஏனெனில்
நான் ப்ராடஸ்ட்டண்டு
இல்லை.
பின்னர் இவர்கள் கம்யூனிஸ்ட்டுகளைத் தேடி வந்தார்கள்
நான் எனக்கென்ன என்றிருந்தேன் – ஏனெனில்
நான் கம்யூனிஸ்ட்
இல்லை.
இறுதியாக இவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்
இப்போது - எனக்காகக் குரல் கொடுக்க
யாருமேயில்லை. - மார்ட்டின் நீய்
முல்லர் (நாஜிகளுக்குப் பலியான ஜெர்மானியக் கவிஞர்)
படைக்கவும் வேண்டும் சுதந்திரம்… விமர்சிக்கவும் வேண்டும் சுதந்திரம்…
கருத்தரங்கம்
01-02-2015, ஞாயிறு மாலை சரியாக 5 மணிக்கு
அருப்புக்கோட்டை, வெள்ளக்கோட்டை, மேலரத வீதி,
நகராட்சி நடுநிலைப் பள்ளியில்
தலைமை : தோழர் ராஜாராம், தமுஎகச
முன்னிலை : மானமிகு ந. ஆனந்தம், பகுத்தறிவாளர்
கழகம்
வரவேற்பும் தொடக்கவுரையும் : ஸ்ரீபதி, தமிழ்நாடு
கலைஇலக்கியப் பெருமன்றம்
கருத்துரை :
தோழர் மணிமாறன், தமுஎகச
தோழர் மதிகண்ணன், மாவிபக
தோழர் சத்யா, AISA
தோழர் மாரியப்பன், SFI
நன்றியுரை : தோழர் கேகே, மாவிபக
அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
மானுட விடுதலைப் பண்பாட்டுக் கழகம்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
பகுத்தறிவாளர் கழகம்
SFI, AISA, DYFI
No comments:
Post a Comment